WhatsApp trick: வாட்ஸ் -அப்பில் டெலிட் செய்த மெசேஜை பார்க்க வேண்டுமா..? அப்போ இதை பண்ணுங்க!
வாட்ஸ் அப் செயலியில் நீக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட செய்தியை மீண்டும் பார்ப்பதற்கான வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளுள் ஒன்று வாட்ஸ் அப். பயனாளர்களுக்கு எளிமையான உரையாடல் வசதிகளை வழங்குவதுதான் வாட்ஸ் அப் முன்னனி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்க காரணம். வாட்ஸ் அப் நிறுவனம் சமீப நாட்களாக தனது பயனாளர்களை கவரும் வகையில் சில பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தவறாக அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை உடனடியாக அழிக்கும் வசதியையும், அதற்கான கால அவகாசத்தை இரண்டு நாட்கள் நீட்டித்தும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருந்தது.
ஆனால் நம்மில் சிலருக்கு அனுப்பப்பட்ட செய்தி என்னவாக இருக்கும் என்பதை அறிய வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ செயலி நமக்கு இந்த வசதியை வழங்காது. பயனாளார்கள் தங்கள் பிழைகளை மறைக்கவும், செய்தியின் சரியான பதிப்பை மீண்டும் அனுப்பவும் இந்த அம்சத்தை WhatsApp வழங்குகிறது. ஆனால் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை பார்க்க வாட்ஸ் அப் அனுமதிப்பதில்லை. ஆனால் அதனை மூன்றாம் தர அப்ளிகேஷன்கள் வழங்குகின்றன. Get Deleted Messages என்னும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பொழுது அது உங்களுக்கு அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீண்டும் படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
குறிப்பு :மூன்றாம் தர அப்ளிகேஷனை பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் . அவை எப்பொழுதுமே உங்களின் வாட்ஸப் செய்திகளை படித்துக்கொண்டேதான் இருக்கும் . உங்களுக்கு தேவையில்லை என்றால் எந்த நேரம் வேண்டுமானாலும் அமைப்புகளை மாற்றவோ , அல்லது செயலியை அழிக்கவோ செய்யலாம். மேலும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யாமல் , ஏதாவது ஒரு இணைப்பு அல்லது விளம்பரங்கள் மூலம் பதிவிறக்க செய்ய முற்படும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் ஃபிஷிங் போன்ற , இணைய பொறியில் சிக்கி தனிப்பட்ட தகவல்கள் அல்லது பணத்தை இழக்க நேரிடலாம் கவனமாக இருங்கள் .
அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகள் பார்ப்பது எப்படி :
நீங்கள் நினைப்பது போல இது அவ்வளவு கடினமான செயல்முறை அல்ல , முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ”கெட் டெலிட் மெசேஜஸ் (Get Deleted Messages ) ” செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
தற்போது பதவிறக்கம் செய்த பின்னர் பயன்பாட்டிற்கு (settings) சில அனுமதிகளை வழங்க வேண்டும். அதாவது வாட்ஸ்அப்பில் உள்ள உரையாடலை படிப்பதற்கான அணுகலை நீங்கள் வழங்க வேண்டும் . முடிந்ததும், நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.
வாட்ஸ்அப்பில் ஒருவர் அனுப்பிய செய்தி நீக்கப்படும்போதெல்லாம், நீக்கப்பட்ட செய்தியைச் சரிபார்க்க இந்த செயலியை திறந்து பார்த்தால் போதும் அது என்ன செய்தி என்பது தெரிந்துவிடும் .