மேலும் அறிய
Advertisement
Whatsapp Ban : ஜூன் மாதத்தில் இத்தனை மில்லியன் இந்திய Whatsapp கணக்குகளுக்கு தடையா? என்ன ஆச்சு..
இந்தியாவில் 22 மில்லியன் மோசமான வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்திருக்கிறது.
வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு வந்த புகார்களை அடுத்து இந்தியாவில் 2.2 மில்லியன் மோசமான வாட்ஸ் அப் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்திருக்கிறது.
Meta-க்கு சொந்தமான WhatsApp ஜூன் 2022 இல் இந்தியாவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான தவறான கணக்குகளை தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 க்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில், மட்டும் வாட்ஸ்அப் நாட்டில் சுமார் 19 லட்சம் மோசமான கணக்குகளை தடை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஜூன் மாதத்தில் 632 புகார் அறிக்கைகளைப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது .அதன்படி 64 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மே மாதத்தில், வாட்ஸ்அப் 528 புகார்களைப் பெற்றுள்ளது ,அதன் அடிப்படையில் 24 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . வாட்ஸ்அப் நிறுவனம் தமது பயனாளர்கள் எதிர்நோக்கும் வன்முறைகளை தடுப்பதில் முன் நிற்பதாக தெரிவித்திருக்கிறது.
என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சேவைகளில், துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில் வாட்ஸ்அப் முன்னணியில் உள்ளது.தங்கள் பயனர்களின் வாட்ஸ் அப் தளத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு, பல ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற அதிநவீன தொழில்நுட்பம், தர ஆய்வு மற்றும் நிபுணர்கள் மூலம் செயல்முறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையொன்றல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் படி வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து பெறப்பட்ட குறைகளுக்கு வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் உள்ளன.
புகார்கள் குறைதீர்க்கும் வழிமுறைகள் மூலம் பெறப்பட்டதாகவும் இவற்றின் மூலம் பல கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அக்கவுண்ட்ஸ் ஆக்ஷன் என்பதின் அடிப்படையில் வாட்ஸ்அப் மறுசீரமைப்பு நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளது.புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள், மாதாந்திர இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion