Whatsapp New Feature: இனிமே செல்போனிலேயே வாட்ஸ்-அப் செயலியை தேடனும் போல..! வரப்போகும் புதிய அப்டேட் இதுதான்
வாட்ஸ்-அப் செயலியின் தோற்றத்தை மாற்றி அமைக்கும் வகையிலான புதிய அப்டேட்டை வழங்க, அதன் தாய் நிறுவனமான மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயனாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்டத வழங்கு வகையில், வாட்ஸ்-அப் செயலிய மொத்தமாக மாற்று வகையிலான புதிய திட்டத்தை மெட்டா குழுமம் முன்னெடுத்துள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டெ முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், அந்த பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலான தோற்றத்தை கொண்ட, வாட்ஸ்-அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போனையே காண முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மொத்தமாக மாறும் வாட்ஸ்-அப் செயலி:
இந்நிலையில் தான், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட user interfaace எனப்படும் பயனர் இடைமுகத்தில் WhatsApp பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய மாற்றங்களில் நவீன தோற்றம் மற்றும் புதிய ஐகான்கள் செயலியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த பயனர் இடைமுகம் புதியதாகவும், நவீனமயமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வாட்ஸ்-அப் செயலியின் தோற்றமே மாறுபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இதுவரை நாம் பயன்படுத்திய தோற்றத்திலோ, நிறத்திலோ அந்த செயலி இருக்காது.
புதிய மாற்றங்கள் என்ன?
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவ்களின் படி, வாட்ஸ்-அப் செயலியின் சாட் பாக்ஸில் மேற்பகுதியில் உள்ள பச்சை நிறம் முழுமையாக நீக்கப்பட உள்ளது. வாட்ஸ்-அப் செயலியில் உள்ள ஐகான்கள், செயலியில் பச்சை நிறம், சாப் பப்புள் கலர்ஸ் மற்றும் ஃப்ளோட்டிங் ஆக்ஷன் பட்டன் ஆகியவையும் புதுப்பிக்கப்பட உள்ளன. டார்க் மோடில் வழங்கப்படும் சாம்பல் அல்லது வெள்ளை நிறங்களுக்கு மாற்றாக, சில கூடுதல் வண்ணங்களின் ஆப்ஷனும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. செயலியின் ஐகானில் உள்ள பச்சை மற்றும் வெள்ளை நிறமும் மாற்றக்கூடும். பயனாளர் இடைமுகம் தொடர்பான மேம்படுத்துதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்களுடன் மேலும் சில அப்டேட்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வந்த கட்டுப்பாடுகள்:
அண்மையில் வாட்ஸ்-அப் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, “நெக்சஸ் 7, சாம்சங் கேலக்ஸி நோட்2, ஹெச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா இசெட், LG Optimus G Pro, சாம்சங் கேலக்ஸி எஸ்2, சாம்சங் கேலக்ஸி எக்ஸ் நெக்ச்ஸ், ஹெச்டிசி சென்சேஷன், மோட்டோரோலா டிரயோடு ரைர், சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10.1, ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர், ஏசர் ஜகோனியா டேப் A5003, சாம்சங் கேலக்ஸி எஸ், ஹெச்டிசி டிசைனர் எச்டி, LG Optimus 2X, சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா Arc3 ஆகிய மொபைல்களில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.