WhatsApp: வாவ்... மொத்த சாட்டையும் புதிய ஃபோனுக்கு ஷேர் பண்ணலாம்..! விரைவில் வருகிறறது வாட்ஸ் அப் அப்டேட்..!
வாட்ஸ் புதிய அப்டேட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவும் வாட்ஸப் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் அவர்கள் யூசர் அனுபவத்தினை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
சமீபத்தில், வாட்சப் ஸ்டேட்டஸில் நமக்கு தெரியாமல் பகிரப்படும் நம்முடைய தகவல்களுக்கு ரிப்போர்ட் செய்தல், ஸ்பேம் அழைப்புகளை தவிக்கவும், வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸில் வைப்பது உள்ளிட்ட பல புதிய அம்சங்களை வாட்சப் வெளியிட்டிருந்தது. அதோடு, நான்கு ஸ்மாட்ஃபோன்கள் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை அறிமுகம் செய்தது மெட்டா நிறுவனம்.
மற்றொரு அப்டே:
வாட்ஸப் அதன் சாட் மற்றும் அட்டாச்மெண்ட் ஃபைல்களையும் எந்த வித பேக்கப்களும் இல்லாமல் புதிய மொபைல் போனிற்கு நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வகையிலான அப்டேட்டை அறிமுக செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.இதன் மூலம் ஒரு வாட்சப் கணக்கை ஒரு போனிலிருந்து,மற்றொரு போனிற்கு பரிமாற்றுவதை எளிதாக்குகிறது.
புதிய ஃபோன் வாங்கும் போது, பழைய போனில் இருக்கும் வாட்ஸப் கணக்கின் மொத்த சாட் மற்றும் ஃபைல்கள் தேவை என்றால், அதனை நாம் கிளவுட் மற்றும் கூகுள் டிரைவ் பேக்கப்பில் சேமித்து வைத்துவிட்டு தான், மற்றவற்றில் பகிர்ந்துகொள்ளவே முடியும். ஆனால், இந்த புதிய வசதி அறிமுகம் செய்த பிறகு வாட்ஸப் மற்றும் ஃபைல்களை அப்படியே புதிய போன்களுக்கு ஷேர் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி சாட் ஷேர் செய்துகொள்ள முடியும்?
வாட்ஸப் ஃபியூச்சர் டிராக்கான WABeraInfo அறிக்கையின் அடி இந்த புதிய அப்டேட் அனைத்து பயனாளர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செட்டிங் - சென்று - வாட்ஸ் செட்டிங்க்ஸ் - சாட் - சாட் டிரான்ஸ்பர் என்பதற்குச் செல்லவும். அடுத்து ஸ்கிரீனில் OR கோட் காண்பிக்கும். அதன்பின்னர். சாட் -ஐ ஷேர் செய்ய விரும்பும் மொபைல் போனில் ஸ்கேன் செய்து பரிமாற்றிக் கொள்ள முடியும்.
வாட்ஸப் அப்டேட்களின் ரவுண்ட்-அப்:
Kept Messages வசதி
வாட்ஸப்பில் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் மோட் (Disappearing messages) செயலில் இருக்கும்போது தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காணாமல் போவதை தடுக்கும் விதத்தில் கெப்ட் மெசேஜ் என்ற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்ட்ராய்ட்-இன் Android 2.23.4.10 வர்ஷன் அப்டேட்டில் வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும்.
வாய்ஸ் நோட்: (Voice Note)
ப்ப்பா.. எவ்வளவு டைப் பண்ணிட்டு பேசுறது. பெரிதாக மெசேஜ்களை டைப் செய்ய சிரமப்படும் பயனாளர்கள், குறிப்பிட்ட தகவலை பேசி வாய்ஸ்-நோட் ஆக ரெக்காட் செய்து அனுப்பும் அம்சம் உள்ளது. ஆனால், அந்த நீளமான வாய்ஸ் நோட்டை கேட்க விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் வாய்ஸ் மெசேஜ் செய்ய முடியாதில்லையா? அதோடு, ஹெட்-செட் இன்றி பொது இடங்களில் வாய்ஸ்-நோட்டை கேட்க முடியாமல் சிரமப்படுவதும், தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வாய்ஸ் நோட்டை பொதுவெளியில் கேட்க முடியாத சூழலும் உண்டு. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு புதிய அப்டேட்டைத்தான் வாட்ஸ்-அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.