மேலும் அறிய

WhatsApp Feature: இனி வாட்ஸ் அப் ஸ்கிரீனை யாருக்கு வேனும்னாலும் ஷேர் பண்ணலாம்...! எப்படி தெரியுமா..?

வாட்ஸ் அப் மூலம் போனின் மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானலும் ஷேர் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர இருக்கிறது.

WhatsApp Feature : வாட்ஸ் அப் மூலம் போனின் மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானலும் ஷேர் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் கொண்டு வர இருக்கிறது.

வாட்ஸ்-அப் செயலி:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன.

குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.

புதிய வசதி

அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷேரிங் (Whatsapp Screen Sharing) அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. இந்த அம்சம் மூலம் போனின் வாட்ஸ் அப் ஸ்கிரீனை மட்டுமல்லாமல் , மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் பயனர்கள் ஷேர் செய்துக் கொள்ள முடியும்.  இந்த அம்சம் ஸ்கைப் (Skype), கூகுள் மீட்(Google Meet), ஜூம் (Zoom call) என அனைத்து வீடியோ காலிங் ஆப்ஸ்களில் இந்த ஸ்கிரீன் ஷேர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் வாட்ஸ் அப்பிலும்  இந்த அம்சம் வரவுள்ளது.

அதாவது ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்போது, அதை ஹோஸ்ட் செய்யும் நபரோ இல்ல வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்து கொள்ள முடியும். இந்த வசதியை மெட்டா நிறுவனம் விரையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த அம்சம் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த அம்சம் வந்தால், வாட்ஸ் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் நண்பர்களுடன் பேசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்து கொள்ள முடியும். 

அண்மையில் வெளிவந்ந அப்டேட்

பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். மேலும், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன்  சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Embed widget