WhatsApp New Features: இனி ஆடியோவுடன் ஸ்க்ரீன்ஷேரிங்; வாட்ஸ் அப் வழங்கியுள்ள புதிய அப்டேட்கள் இதோ!
WhatsApp New Features: வாட்ஸ்-அப்பில் வெளிவந்துள்ள புதிய அப்டேட்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
வாட்ஸ் அப் அறிமுகம் செய்யப்பட்ட 2015-ம் ஆண்டிலுருந்து அந்நிறுவனம் பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றிற்கு வாட்ஸ் அப் ஏற்படுத்தியுள்ள மாற்றம் அளப்பரியது.
மெட்டா நிறுவனம் பயனாளர்களின் வசதிற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில்,கான்டெக்ட் லிஸ்டில் இல்லாமலேயே தொடர்பு எண்ணை கொண்டு கால் செய்யும் ’in-app dialer’ முறை விரைவில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதோடு பல்வேறு அப்டேட்கள் வரவிருப்பதாக தெரிவித்திருக்கிறது. புதிய ஐகான், மெசேஜ், வீடியோ உள்ளிட்டவற்றை ஃபில்டர் செய்யும் வசதி, டார்மோட் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.விரைவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் புரோஃபைல் ஃபோட்டோ வைக்கும் வசதியை அறிமுக செய்ய இருக்கிறது. வாட்ஸ் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்-ல் ஆடியோ மெசேஜ் போலவே வீடியோ மெசேஜ் அனுப்பு வசதி அறிமுகப்படுத்தியிருந்தது. இப்போது வீடியோ மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்யும் வசதி உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுவாக அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ரெக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
ஸ்க்ரீன் ஷேரிங் வித் ஆடியோ
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசெஜ்ஜில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கு வீடியோ கால் அழைப்பின்போது ஸ்க்ரீன்ஷேர் செய்யலாம். அதில் உங்களுடைய ஃபோட்டோகள், டாக்குமெண்ட்கள் அல்லது இருவரும் இணைந்து வீடியோ கேம் விளையாடுவது, வீடியோ பார்க்கும் வசதியை இருக்கிறது. அதில் வீடியோ காலில் இருப்பவர்கள் இருவரும் வீடியோவை சேர்த்து காணலாம். தொலைவில் இருந்தாலும் வீடியோ காலில் சேர்ந்து இருவரும் ஒரே வீடியோவை காணலாம். அது தொடர்பாக உரையாடலாம். இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பில் வர உள்ளது. அதுவும் ஆடியோ உடன் அப்டேட் வரவிருக்கிறது. முன்னதாக, ஆடியோ இல்லாமல் ஸ்க்ரீன்ஷேர் செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் இருக்கிறது.
வீடியோ கால்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு இருந்தபோது பெரும்பால நிறுவனங்களில் வீடுகளில் இருந்து பணி செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. பள்ளி, கல்லூரிகள் கூட ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடைபெற்றன. அப்போது, கூகுள் மீட், Zoom போன்ற குழு வீடியோ அழைப்புகள் அதற்கு பயன்படுத்தப்பட்டது. அப்போது வாட்ஸ் அப் குழு வீடியோ காலில் பங்கெற்பாளர்களுன் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தியது. இதன் மூலம் மூட்டிங்கள் உள்ளிட்ட தேவைக்காக நிறைய பேர் வீடியோ கால் மூலம் இணையலாம். இப்போது ஒரே நேரத்தில் 32 பேர் வீடியோ அழைப்பில் இருக்க முடியும். இதன் மூலம், நீங்கள் டெஸ்க்டாப் அல்லது மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரே அழைப்பில் அதிக நபர்கள் பங்கேற் முடியும். அலுவலக மீட்டிங், கல்வி பயிலும் வகுப்புகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த அப்டேட் ஏற்றதாக இருக்கும். ஆனால், இது Google Meet, Teams அல்லது Zoom உடன் போட்டியிடுமா என்று பயன்படுத்திய பிறகே தெரிய வரும்.
மேம்படுத்தப்பட்ட வீடியோ & ஆடியோ
WhatsApp சமீபத்தில் MLow Code-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது வீடியோ, ஆடியோ அழைப்புகளின் தரத்தை மேம்படுத்துகிறது. மொபைல் பயனர்களைப் பற்றி நாம் பேசினால், MLow Code வசதி இருப்பது சிறந்த ஒலி மற்றும் வீடியோ தரம் வாய்ந்ததாக இருப்பதற்கு உதவும். எனவே இந்த அப்டேட்டிற்கு பிற்கு நீங்கள் குறைவான நெட்வோர்க் வசதி இருக்கும் நேரத்தில்/ இடங்களில் கூட பேசுவது தெளிவாக கேட்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு இன்டர்நெட் சிக்னல் சீராக கிடைக்கவில்லை என்றாலும் நீங்கள் பேசுவதை எதிர்முனையில் இருப்பவர்களால் நன்றாக கேட்கமுடியும்.
வீடியோ அழைப்புகளைப் பொறுத்தவரை. இந்த அப்டேட் வீடியோ க்ளியராக தெரியும். பழைய மாடல் மொபைல், மோசமான நெட்வொர்க் இணைப்பு இருந்தால் கூட ஒட்டுமொத்த ஆடியோ தரம் தெளிவாக இருக்கும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
ஸ்பீக்கர் ஸ்பாட்லைட்
வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளில் பங்கேற்பாளர்கள் நிறைய பேர் இருக்கும்போது யார் பேசுகிறார்கள் அல்லது பேச வேண்டும் உள்ளிட்டவற்றை ஒருவர் நிர்வகிக்க முடியும். அதற்கு பயன்படும் விதமாக யார் எப்போது பேசுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ‘ஸ்பீக்கர் ஸ்பாட்லைட்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பீக்கர் ஸ்பாட்லைட் அம்சத்துடன், வீடியோ அழைப்பில் பேசும் நபர் தானாகவே உங்கள் திரையில் முதலில் தோன்றுவார். இது பயனர்கள் உரையாடல்களைப் பின்தொடர்வதை எளிதாக்கும் மற்றும் பேச்சாளர் கவனத்தைப் பெறுவதை இது உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.