Whatsapp New Feature: பேஸ்புக்கை போலவே வாட்ஸ்-அப்பில் மாஸ்காட்டும் வசதி.. இனி ஜாலியா பேசுங்க ப்ரோ..
மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு விரைவில் புதிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில் தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செட்யூல் செய்யும் அம்சம்:
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, வாட்ஸ்-அப் செயலியில் இனி அழைப்புகளை செட்யூல் செய்து மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செட்யூல் செய்வது எப்படி?
குரூப்பில் உள்ள நபர்களுக்கு செட்யூல் செய்து அழைப்பு மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு வாட்ஸ்-அப் செயலியில் கால் பட்டனை அழுத்தியதும் திரையில் ஒரு அட்டை தோன்றும். அதில், அழைப்புக்கான தலைப்பு, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவிட்டு, கிரியேட் பட்டனை அழுத்த வேண்டும். அதைதொடர்ந்து, குரூப்பில் உள்ள நபர்களுக்கு அழைப்பு செட்யூல் செய்யப்பட்டது மற்றும் அழைப்பு தொடங்கியதற்கான நோட்டிபிகேஷன் தோன்றும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால் - ஷார்ட் கட்
முன்னதாக, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, வாட்ஸ்-அப் செயலிக்குள் சென்று காண்டேக்ட்ஸ் பட்டியலை தேர்வு செய்து, அதில் குறிப்பிட்ட எண்ணை தொடுவதன் மூலம், அதற்கு ஷார்ட்-கட் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம், பயனாளர் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபருக்கு, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோக்களை அனுப்பும் வசதி:
வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு 100 போட்டோகள் / வீடியோக்கள் வரை அனுப்பும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை 30 போட்டோக்கள் / வீடியோக்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையில் புதிய அப்டேட் பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது.
WaBetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்ட் வர்ஷன் பீட்டா அப்டேட்டின் படி, இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. போட்டோ ஆல்பங்களை அனுப்ப இந்தப் புதிய வசதி உதவுகிறது. மேலும் இந்த புதிய வசதியின் மூலம், அதிகமான போட்டோக்களை தேர்வு செய்யும்போது ஒரே போட்டோவை மீண்டும் செலக்ட் செய்யாமல் இருக்கும் வகையில் இந்த அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வாட்ஸ்-அப் செயலியை மேம்படுத்தும் நோக்கில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களில் ஈடுபட்டுள்ளது.