மேலும் அறிய

Whatsapp: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்யலாம்.. வாட்ஸ்-அப் வழங்கும் புதிய அப்டேட்

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்காக, மீண்டும் ஒரு அசத்தல் அப்டேட்டை சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

தகவல் பரிமாற்றத்தில் முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ள, வாட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தனிநபர் தரவுகள் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்தாலும், பொதுமக்களிடையே வாட்ஸ்-அப் செயலியின் செயல்பாடு குறைந்தபாடு இல்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.  பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய தொழில்நுட்ப வசதிளை வழங்கி வருவதும், அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தடுத்து வழங்கப்பட்ட அப்டேட்கள்:

உதாரணமாக,  256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர முடியும் என்றிருந்த  எண்ணிக்கை வரம்பு,  512 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுஞ்செய்திகள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே குறுஞ்செய்தியை பார்க்க அனுமதிப்பது, ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சமும், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதி, லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கை இணைக்க லிங்க்ட் டிவைஸ் வசதி  போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. விரைவில் லேப்டாப்பிலேயே வாட்ஸ்-அப் கணக்கிலிருந்து வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விண்டோஸ் செல்போன்களில் சிலவற்றில் மற்றும் குறிப்பிட்ட புதிய வசதி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்-அப் செயலியின் புதிய அம்சம்:

இந்நிலையில், பயனர்கள் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து தங்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் படிப்படியாக புதிய வசதி கிடைக்கப்பெறுகிறது. இதற்கு பயனாளர்கள் Google Play Store/Apple App Storeக்குச் சென்று வாட்ஸ்-அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது:

- பயனர்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை  திறக்கவும்

- NEW CHAT பொத்தானைத் தட்டவும் - ஐபோனில் மேல் வலது மூலையில் கிடைக்கும் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் கீழே கிடைக்கும்

- இங்கே, உங்கள் மொபைல் எண்ணுடன் தொடர்பு அட்டையில் ‘Message Yourself’ எனக் காணலாம்.

- தொடர்பைக் கிளிக் செய்து பயனளரகள் தங்களுக்கு தாங்களே குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொள்ளலாம்.

புதிய அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு செய்திகளுடன் புகைப்படங்கள், ஆடியோக்கள், வீடியோக்களை அனுப்ப முடியும். தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக ஆவணங்களைப் பகிர முடியும் எனவும், மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Rohit Gill: ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Rohit Gill: ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Embed widget