மேலும் அறிய

Whatsapp: இனி வீடியோ கால் பேசும்போது இதையும் செய்யலாம்.. வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்காக, மீண்டும் ஒரு அசத்தல் அப்டேட்டை சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியா தொழில்நுட்பமாக மாறியுள்ள, வாட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்-அப் செயலி மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்தாலும், பொதுமக்களிடையே வாட்ஸ்-அப் செயலியின் பயன்பாடு குறைந்தபாடு இல்லை. பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்-அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய தொழில்நுட்ப வசதிளை வழங்கி வருவதும், அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தடுத்து வழங்கப்பட்ட அப்டேட்கள்:

உதாரணமாக,  256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர முடியும் என்றிருந்த  எண்ணிக்கை வரம்பு,  512 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுஞ்செய்திகள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே குறுஞ்செய்தியை பார்க்க அனுமதிப்பது, ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சமும், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதி, லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கை இணைக்க லிங்க்ட் டிவைஸ் வசதி  போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது. விரைவில் லேப்டாப்பிலேயே வாட்ஸ்-அப் கணக்கிலிருந்து வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விண்டோஸ் செல்போன்களில் சிலவற்றில் மற்றும் குறிப்பிட்ட புதிய வசதி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் வெளியான புதிய வசதி:

பயனர்கள் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து தங்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் படிப்படியாக புதிய வசதி கிடைக்கப்பெறுகிறது.

பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட்:

இந்நிலையில் தான், பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் எனும் புதிய வசதியை, ஐ-போன் பயனாளர்களுக்கு வாட்ஸ்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக, WABetainfo அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஐ-போன் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசும்போது, அந்த செயலியை விட்டு வெளியேற முடியாது. வேறு செயலியை பயன்படுத்தவும் முடியாது. ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள  பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட் வசதி, அந்த பிரச்னைக்கு தீர்வாக அமைய உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

புதிய எமோஜிக்கள் அறிமுகம்:

சோதனை முயற்சியாக தற்போது IOS 16.1 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஐபோன்களில் மட்டுமே, புதிய பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் வசதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதி அனைத்து ஐ-போன் பயனாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சாட் செய்யும் அனுபவத்தை மேம்படுத்த புதியதாக 8 எமோஜிக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதோடு, மேலும் 21 புதிய எமோஜிக்களையும், ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாகவே அழிந்து விடும் வசதியை மேம்படுத்தவும், புதிய அப்டேட் விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்-அப் நிறுவனம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget