WhatsApp : வாட்சப்பின் ‘View once' வசதியில் இந்தப் பிரச்னை இருக்கு!
படத்தைப் பார்க்கும் பயனாளரால் அதனைச் சேமித்து வைக்க முடியாது என்றாலும் அனுப்பும் புகைப்படத்தை ஒருவரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும்.
நாம் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்ததும் தானே காணாமல் போகும் புதிய அப்டேட்டை வாட்சப் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது இந்த புதிய அப்டேட்டில் பிரச்னை உள்ளது என்கிற தகவல் வைரலாகி வருகிறது.
ஒருமுறைப் புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பினால் அதனைப் பார்த்தவுடன் தானாகவே டெலீட் ஆகிவிடும் வசதியை வாட்சப் நிறுவனம் உருவாக்கியது. தற்போது இதனை சர்வதேச அளவில் வாட்சப் பயனாளர்களுக்கு அப்டேட் செய்துவருகிறது வாட்சப். இதன்மூலம் பயனாளர்களின் பிரைவசியை மேம்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது அந்த நிறுவனம்.வாட்சப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியின்படி நீங்கள் அனுப்பும் வீடியோ அல்லது புகைப்படம் ஒருமுறை பார்த்தவுடன் தானாகவே காணாமல் போகும்.அல்லது பார்க்காத நிலையில் அதிகபட்சமாகப் 14 நாட்கள் வரை அவை உங்கள் போனிலேயே இருக்கும். வாட்சப் நிறுவனம் பயனாளர்களுக்காகத் தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்களைப் புகுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அப்டேட் குறித்து கருத்து கூறியிருந்த ஃபேஸ்புக் நிறுவனம் ‘போனில் புகைப்படம் எடுப்பது நமது தினசரியில் ஒருபகுதியாகிவிட்டது. அதற்காக நாம் பகிரும் அத்தனையுமே சேமித்து வைக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. புகைப்படம் எடுத்துச் சேமிப்பதால் நமது போனில் தேவையில்லாமல் அவை இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். அதனால்தான் இந்த ஒருமுறை பார்த்ததும் காணாமல் போகும் வசதியை நிறுவனம் உருவாக்கியுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
’அண்ணாவின் இதயத்தை இரவலாய் பெற்றவன்’ - ஈடில்லா கருணாநிதி... நினைவுதினம்!
ஆனால் இதில் இருக்கும் தவறு என்ன?
படத்தைப் பார்க்கும் பயனாளரால் அதனைச் சேமித்து வைக்க முடியாது என்றாலும் அனுப்பும் புகைப்படத்தை ஒருவரால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கமுடியும். அந்த ஸ்க்ரீன்ஷாட்டை அவரால் தனது மொபைலில் சேமித்து வைக்கமுடியும் அல்லது பிறருடைய மொபைலுக்கு அனுப்ப முடியும். அதனால் தான் அனுப்பும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நம்பத்தகுந்த வட்டாரங்களுக்கு மட்டுமே அனுப்ப பரிந்துரைக்கப்படுகிறார்கள். பயனாளர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்தால் அதுபற்றி நோட்டிஃபிகேஷனை ஸ்நாப்சாட் அனுப்பும் ஆனால் அதுபோன்ற வசதியை வாட்சப் ஏன் ஏற்படுத்தவில்லை என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்கள் நிபுணர்கள்.
இதுதவிர, அண்மையில் ஆப்பிள் போனிலிருந்து ஆண்ட்ராய்ட் போன்களுக்கு வாட்சப் தகவல்களை மாற்றிக்கொள்ளும் வசதியை அந்த நிறுவனம் கொண்டு வந்திருந்தது.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்த நிலையில் ஐபோன் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு ஒரு அப்டேட்டை வாட்ஸப் கொண்டு வரவுள்ளது. ஐபோன் வைத்திருக்கும் நீங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆண்ட்ராய்ட் மாறினால் உங்களது வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் எடுக்க முடியுமா என்றால், இப்போது முடியாது தான். ஆனால் வரப்போகும் அப்டேட் மூலம் இனி ஐபோனில் இருந்து மெசேஜ்களை ஆண்ட்ராய்ட்க்கு மாற்றிக்கொள்ளலாம். இது தொடர்பான தகவலை WABetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அங்கு பதிவிடப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில் அதற்கான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கொடுக்கப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்வது மூலம் ஆண்ட்ராய்டுக்கு உங்கள் மெசேஜ்களை மாற்றிக்கொள்ளலாம். இது குறித்து தெரிவித்துள்ள WABetaInfo, இந்த அப்டேட் இப்போதுதான் தயாராகி வருகிறது. விரைவில் வரும் அப்டேட்டில் இது இடம்பெறும் என தெரிவித்திருந்தது.