Vodafone Idea | ரூ.399க்கு வோடஃபோன் கொடுக்கும் அசத்தல் ப்ளான்.. ஜியோ, ஏர்டெல் எப்படி?
வோடபோன் ஐடியா ரூ .399 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை தற்போது வழங்குகிறது.
வோடபோன் ஐடியா (Vi) தனது 399 திட்டத்துடன் பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் வழங்கும் நன்மைகளை வழங்குகிறது. பாரதி ஏர்டெல் ரூ .399 திட்டத்துடன் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது
வோடபோன் ஐடியா ரூ .399 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை தற்போது வழங்குகிறது.
வோடபோன் ஐடியா (Vi) இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆகும். சிறந்த நெட்வொர்க் கவரேஜை வழங்காததற்காக டெல்கோவால் அடிக்கடி விமர்சிக்கப்படும் நிறுவனம் ஆகும், ஆனால் அதன் திட்டங்கள் தொழில்துறையில் மிகவும் சிறந்தவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர்கள் வழங்கும் பல அம்சங்களில், வோடபோன் ஐடியாவின் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட அதன் போட்டியாளர்களை விட மிகச் சிறந்ததாக விளங்குகிறது. வோடபோன் ஐடியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு உயர்நிலைத் திட்டமும் அதன் போட்டியாளர்களை விட சிறந்த நன்மைகளுடன் வருகிறது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ .400 க்கு கீழ் வழங்கும் ஒரு திட்டம் வைத்துள்ளனர், அது ரூ. 399 திட்டம். சந்தையில் உள்ள அனைத்து ஆபரேட்டர்களில், வோடபோன் ஐடியாவின் (Vi) ரூ. 399 திட்டம் மிகவும் சிறந்தது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஏர்டெல், ஜியோ திட்டங்களுடன் ஒப்பிடும்போது வோடபோன் ஐடியா ரூ. 399 திட்ட விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான நன்மைகளை வழங்குகிறது. அடிப்படை நன்மைகளுடன் தொடங்கி, பயனர்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால் பெறுகிறார்கள். இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்’ மற்றும் ‘பிங்க் ஆல் நைட்’ ஆகிய கூடுதல் சலுகைகள் உள்ளன. பயனர்கள் ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியம் மற்றும் வி மூவிஸ் & டிவியின் பல ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளையும் பெறுகிறார்கள். மற்ற ஆபரேட்டர்கள் அதே விலைக்கு என்ன வழங்குகிறார்கள் என்று பார்ப்போம்.
பாரதி ஏர்டெல் தனது ரூ .399 திட்டத்துடன் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என்று உறுதி அளிக்கிறது. பாரதி ஏர்டெல்லின் ரூ .399 திட்டமும் 56 நாட்களுக்கு வருகிறது. பயனர்களுக்கு கூடுதலாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் செயல்பாடுகள் வழங்கப்படுகின்றன. இந்த நன்மைகளில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் ரெஜிஸ்ட்ரேஷன், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்கில், இலவச ஹெலோ ட்யூன்ஸ், ஷா அகாடமியின் ஒரு வருட சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளுக்கு ரூ .100 கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.
ரிலையன்ஸ் ஜியோ அதன் 399 திட்டத்துடன் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டங்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசமாக, கூடுதல் சலுகைகளாக ஜியோ ஆப்ஸ்களின் இலவச பயன்பாட்டை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குவதுடன், கூடுதல் நன்மைகளில் எந்த பெரிய OTT சந்தாவும் இல்லை. JioCloud, JioCinema, JioTV, JioNews மற்றும் JioSecurity ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு ஜியோ ஐந்து பயன்பாடுகளின் இலவச சந்தாவை வழங்குகிறது.
வோடஃபோன் ஐடியா (Vi) மட்டுமே ZEE5 பிரீமியத்தின் பெரிய OTT நன்மையை பயனர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அத்தகைய நன்மைகளை வழங்கவில்லை. மேலும், வோடாஃபோன் ஐடியா பயனர்கள் 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்க் ஆல் நைட்' சலுகைகள் உட்பட அதன் இரண்டு சலுகைகளுடன் அதிக டேட்டாவை உட்கொள்ளலாம்.