![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Lovers day: ஃப்ரீ... ஃபிரீ....! காதலர் தினத்திற்கு வோடோஃபோன் அறிவித்த பம்பர் பரிசு...
காதலர் தினத்தை முன்னிட்டு, பல பரிசுகளை வோடாஃபோன் - ஐடியா அறிவித்துள்ளது.
![Lovers day: ஃப்ரீ... ஃபிரீ....! காதலர் தினத்திற்கு வோடோஃபோன் அறிவித்த பம்பர் பரிசு... Vodafone idea announces love gift free 5 gb network data for lovers day February 14 Lovers day: ஃப்ரீ... ஃபிரீ....! காதலர் தினத்திற்கு வோடோஃபோன் அறிவித்த பம்பர் பரிசு...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/12/904d2be97c7b68827aeefb83d2c5d92a1676205558848571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலக முழுவதும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அணையில் தேக்கி வைத்த தண்ணீரை வறண்ட காலங்களில் திறப்பது போல, இந்த தினத்தில், பலரும் தங்களது மனதில் தேக்கி வைத்த காதலை திறந்து விடுவர் . சிலருக்கு காதல் கை கூடும், சிலருக்கு ஒருதலை காதலாகவே மாறும்.
மொழியில்லா காதல்:
காதலுக்கு மொழியில்லை,சாதியில்லை, மதமில்லை என்று கூறுவார்கள். அந்த காதலை கொண்டாடும் விதமாக பல்வேறு நிறுவனங்களும் ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். சில ஆடை நிறுவனங்கள் ஆடைகளுக்கு ஆஃபர்களையும், பரிசு பொருட்களை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் தங்களது பரிசு பொருட்களுக்கு ஆஃபர்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாஃபோன் – ஐடியா, தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆஃபர்களை அறிவித்துள்ளன.
ஆஃபர்கள்:
ரூ. 299 மற்றும் அதற்கு அதிகமான ரீசார்ஜ் வசதிகளில் 5 ஜிபி நெட்வொர் டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 199 மற்றும் ரூ. 299-க்கு வரையிலான ரீசார்ஜ் வசதிகளில் 2 ஜிபி நெட்வொர் டேட்டா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், vi love tunes contest-ல் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலயில், இச்செய்தி காதலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)