Vivo V23e 5G| இன்னும் இரண்டு நாள்தான்.. எல்லாமே வேற லெவல்.. நச்சுனு வருது Vivoன் சூப்பர் போன்..!
விளையாட்டு மற்றும் அதிக மெமரி கொண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியுமா என சோதிக்கும் multi-core score டெஸ்டிங்கில் 1,551 முதல் 1,726 என்ற புள்ளிகளை பெற்றிருந்தது
அறிமுகமான குறுகிய காலத்திலேயே பல பயனாளர்களை தன்வசப்படுத்திய மொபைல் நிறுவனங்களுள் ஒன்று Vivo. அதுவரையில் ஸ்டீரியோடைப் என்னும் ஒரே மாதிரியான வண்ணங்களில் இருந்து வந்த ஆண்ட்ராய்ட் மொபைல்போன்களில் நிற புதுமைகளை பொருத்திய பெருமை Vivo நிறுவனத்தையே சேரும். பட்ஜெட் விலை முதல் பகட்டான விலை வரையில் கிடைக்கும் விவோ , தனது அடுத்த படைப்பை வெளியிட தயாராகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. Vivo V23e 5G என பெயர் வைக்கப்பட்ட தனது புதிய மொபைல்போனை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி சந்தைப்படுத்தவுள்ளது விவோ. 5 ஜி மொபைல்போனாக அறிமுகமாகவுள்ள Vivo V23e மொபைலானது, 50 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 4G மாறுபாட்டைப் போலல்லாமல் 44 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் வசதி உள்ளதாக தாய்லாந்து இணையதளம் ஒன்றில் சில தகவல்கள் கசிந்துள்ளது.
Vivo V23e 5G with Model number (V2126) Spotted on Geekbench.
— Mobile Deck (@mobile_deck) November 21, 2021
MediaTek Dimensity 810
8GB RAM
Android 11 pic.twitter.com/nsCdoB14OD
முன்னதாகவே இணையதளத்தில் Vivo V23e குறித்த சில வசதிகள் வெளியானது. முன்னதாக புராஸசருக்கான single-core score டெஸ்டிங்கில் 471 மற்றும் 558 என்ற அளவிலான புள்ளிகளை பெற்றிருந்தது. அதே போல விளையாட்டு மற்றும் அதிக மெமரி கொண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியுமா என சோதிக்கும் multi-core score டெஸ்டிங்கில் 1,551 முதல் 1,726 என்ற புள்ளிகளை பெற்றிருந்தது.அடிப்படை வசதிகளை பொருத்தவரையில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு வசதியுடன் களமிறங்கும் Vivo V23e 5G மொபைலானது அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 44-மெகாபிக்சல் மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. 64MP + 8MP U.W + 2MP அளவிலான பின்பக்க கேமரா வசதிகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் 6.44" FHD மற்றும் AMOLED மற்றும் 1080×2400 பிக்சல் ரெசலியூசன் வசதிகளுடன் களமிறங்கும் என தெரிகிறது.MediaTek Dimensity 810 SoC புராசஸர் மற்றும் 4050mAh பேட்டரி வசதியை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில் முன்பு வெளியான Vivo V23e 4G மொபைலை ஒத்து காணப்படுகிறது.Vivo V23e 5G மூன்லைட் ஷேடோ மற்றும் சன்ஷைன் கோஸ்ட் என்ற வண்ணங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
Vivo V23e 5G தோற்றத்தை வைத்து பார்க்கும் பொழுது USB Type-C port மற்றும் கீழே ஸ்பீக்கர் கிரில்லை கொண்டுள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஆகியவை ஸ்மார்ட்போனின் வலது பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் .Vivo V23e 5G மொபைல் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.