Spiders Into Robots: இறந்த சிலந்திகள் இனிமே ரோபோவாகும்.. ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!
இறந்த சிலந்திகளை "நெக்ரோபோடிக் சிலந்திகளாக" மாற்றுவது எப்படி என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இறந்துபோன சிலந்திகளை நெக்ரோபோடிக் சிலந்திகளாக மாற்றுவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆராய்ச்சியின் அடிப்படையில் இறந்த சிலந்தியின் உடல்களை மிகச்சிறிய ரோபோ போல பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இறந்த சிலந்தியின் உடலில் குறிப்பாக கால்களில் காற்றினை நிரப்பி அவற்றை இயக்க முடியும் என்பதால் சிலந்தியின் கால்கள் எதையும் பற்றிப்பிடித்து தூக்கும் அளவுக்கு பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்ற விலங்குகளைப்போல தசைகளால் தங்கள் கால்களை சிலந்தி இயக்குவதில்லை. கிட்டத்தட்ட ஒரு ஹைட்ராலிக் முறையை அது பயன்படுத்துகிறது. சிலந்தி தலைக்கு அருகில் இருக்கும் ஒரு அறையில் இருந்து ரத்தம் அனைத்து கால்களுக்கு பிரஷராக பீய்ச்சப்படும் இதனால் கால்கள் விரிவடைந்து பொருட்களையோ, இரையையோ பிடிக்க தயாராகிறது. பின்னர் ரத்த ஓட்டம் குறைக்கப்படுவதாக் கால்கள் சுருங்கும். இதனைக் கண்டிபிடித்த நாங்கள் ரத்தத்துக்கு பதிலாக சிரஞ்சு மூலம் குறிப்பிட்ட காற்றை அழுத்தத்துடன் அனுப்பினோம்.
View this post on Instagram
அது கால்களை விரிவடையச் செய்து பிடிமானத்துக்கு தயாராகிறது. இப்படி பயன்படுத்தி சின்னஞ்சிறிய பல பொருட்களை பிடித்து தூக்க இறந்துபோன சிலந்தி பயன்பட்டுள்ளது. தன் சொந்த எடையைவிட 130% அதிக எடையை இறந்த சிலந்திகள் தூக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எடையை பொருத்தவரை ஒவ்வொரு சிலந்திக்கும் ஒரு குறிப்பிட்ட திறன் இருப்பதால் சிலந்திக்கு சிலந்தி இது வேறுபடலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்