மேலும் அறிய

Twitter Blue Subscription:விலையேறும் ட்விட்டர் ப்ளூ சந்தா.... 66 சதவிகிதம் அதிகரிப்பு!

Twitter Blue Subscription:ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில், தற்போது புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், அதன் பிரீமியம் சந்தா சேவையான ட்விட்டர் ப்ளூவின் விலையை மாதந்தோறும் 2.99 அமெரிக்க டாலரில் இருந்து 4.99 அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இது தற்போதைய விலையில் இருந்து 66 விழுக்காடு உயர்வாகும். ட்விட்டர் புளூ (Twitter Blue Subscription) சந்தாதாரர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தற்போது புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு அமலில் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. தற்போதுள்ள சந்தாதாரர்களுக்கு அக்டோபர் வரை அதிகக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் ட்விட்டர் கூறியுள்ளது.

முன்னதாக, அடிக்கடி பல அப்டேட்களை செய்துவரும் ட்விட்டர் தனது யூஸர்கள் இனி தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் சாதனங்களில் ட்விட்டர் ஸ்பேஸ் கிளிப்களைப் பகிரலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸ்களுக்கான புதிய கிளிப்பிங் கருவியை சோதிக்கத் தொடங்குவதாகக் கூறியிருந்தது. இப்போது, இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள ட்விட்டர் ,"கிளிப்பிங் கருவி தொடர்பான சோதனை நல்லபடியாக முடிந்தது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெப்பில் உள்ள அனைவருக்கும் கிளிப்பிங்கை வெளியிடுகிறோம்!" என ட்வீட் செய்துள்ளது.

தற்போது, ட்விட்டர் இணைய பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கவில்லை. இருப்பினும், விரைவில் அது தரப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிவிட்டர் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மற்றவர்களுடன் பகிர இந்த அம்சத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஸ்பேஸிலிருந்து பயனர்கள் இப்போது 30 வினாடிகள் கொண்ட ஆடியோவை உருவாக்க முடியும். 

Twitter Blue Subscription:விலையேறும் ட்விட்டர் ப்ளூ சந்தா.... 66 சதவிகிதம் அதிகரிப்பு!

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் சமீப காலமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய போதிலிருந்தே ஒரு நிலைத்தன்மையின்மை நிலவுகிறது. ஏற்கனவே அதன் வருவாய் 1.18 பில்லியன் டாலராக குறைந்த நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 270 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், அந்த முடிவை கைவிடுவதாக தொடர்ந்து அறிவித்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கானது வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு விவகாரங்கள் அதன் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் மூலமாக கிடைத்துள்ள வருவாய் 2% மட்டுமே உயர்ந்து 1.08 பில்லியனை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 1.22 பில்லியனாக இருக்கும் என்று வால் ஸ்ட்ரீட் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் சப்ஸ்க்ரிப்ஸன்கள் எல்லாவற்றையும் சேர்த்து 1.18 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.19 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்தது ட்விட்டர் நிறுவனம்.  மொத்த வருவாய் இந்தக் காலாண்டில் 1.32 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது.

ட்விட்டர் நிறுவன விளம்பரப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விளம்பரதாரர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றனர். எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கின் போக்கு எப்படிச் சென்றாலும், எப்படி முடிவடைந்தாலும் அதன் வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu RoundUp: விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தீவிர எதிர்ப்பு, மதுரையில் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Embed widget