மேலும் அறிய

Twitter : டிவிட்டரில் புதிய வெரிஃபிகேசன் கொள்கைகள் அமல்; என்னென்ன மாற்றங்கள்; இதைப் படிங்க!

Twitter : டிவிட்டரில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வெரிஃபிகேசன் சிஸ்டம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து டிவிட்டர் விளக்கம் கொடுத்துள்ளது.

ட்விட்டர் அக்கவுண்ட் வெரிஃபைடு கணக்கு பல்வேறு பிரபல கணக்குகள் உட்பட அனைவரையும் 'Unfollow' செய்துள்ளது.திடிரென டிவிட்டர் பெரிய அளவில் 'Unfollow' செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் வெரிஃபைடு கணக்கு ஃபாலோ செய்யும் எண்ணிக்கை ‘0’ ஆக உள்ளது.

டிவிட்டர் வெரிஃபிகேசனில் பல மாற்றங்கள்:

ட்விட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், ட்விட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ட்விட்டரில் போலியான பயனர்களை கண்டறியும் வகையில் வெரிஃபிகேசன் முறையிலும் மாற்றங்களை செய்ய திட்டம் குறித்து தெரிவித்திருந்தார்.  பயனர்களின் உண்மைத்தன்மை, உண்மையான அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 'official' எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு 'parody' எனும் பேட்ச் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

ப்ளூ டிக்:

டிவிட்டரில் வெரிஃபைட் அக்கவுண்ட் பெறுவதற்கு பயனர்கள் கட்டணம், மாத சந்தா செலுத்த வேண்டியது அவசியம் என்று ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காலக்கெடுவும் விதித்திருந்தது. இந்நிலையில், பணம் செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் ஏப்ரம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நீக்கப்படும் என்றும் வெரிஃபைடு கணக்கிற்கான  ப்ளூ டிக் பெறவும், தொடரவும் சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்கவும், லாபத்தை ஈட்டுவதற்காகவும் பல்வேறு நடைமுறை எடுத்துவருகிறார். டிவிட்டர் அலுவலகத்தின் செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் அவர் பணியாளர்களுக்கு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

வெரிஃபைடு சந்தா செலுத்தாத கணக்குகளுக்கு ப்ளூ டிக் நீக்கம்:

ட்விட்டர் அக்கவுண்ட் வெரிஃபைடு கணக்கின் சந்தாவிற்கு பணம் செலுத்தாததால் புகழ்பெற்ற அமெரிக்க செய்தி ஊடகமான நியூயார்க் டைம்ஸ்-ன் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்தவில்லை என்றால் ப்ளு டிக் ஏப்ரல்1-ஆம் தேதியிலிருந்து நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, பல அமெரிக்க பிரபல செய்தி ஊடகங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் வெரிஃபைடு 

கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் வெரிஃபைடு அக்கவுண்ட் முறைகளை அறிமுகம் செய்திருந்தது. பிரபலங்கல், அரசியவாதி, பிரபல நிறுவனங்கள், பிராண்ட்கள் உள்ளிட்டவற்றை அடையாள கண்டுகொள்ள உதவும் வகையில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டது.

டிவிட்டர் வெப் என்றால் மாதம் ஒன்றிருக்கு 8 அமெரிக்க டாலர்கள், அதுவே ஐ.ஓ.எஸ். அல்லது ஆண்ட்ராய்டு ஆப் என்றால் 11 அமெரிக்க டாலர்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 எனும் கட்டணத்தில் கிடைக்கிறது. இதேபோன்று, இந்தக் கணக்குகள் வணிகமாகவோ அல்லது லாப நோக்கத்திற்காகவோ இருந்தால் கோல்டன் டிக், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். அரசு அமைப்புகளுக்கு கிரே குறியீடு வழங்கப்படுகிறது.

வண்ணங்களின் விவரம்:

ப்ளூ டிக்

ப்ளூ டிக் டிவிட்டர் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்பட்டாலும் லெகசி, வெரிஃபைடு என்று இரண்டு உள்ளது. 

Twitter : டிவிட்டரில் புதிய வெரிஃபிகேசன் கொள்கைகள் அமல்; என்னென்ன மாற்றங்கள்; இதைப் படிங்க!

டிவிட்டரில் ஷாருக் கான் கணக்கில் 'Subscribed to Twitter Blue or is a legacy Verified account' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.  

கோல்டு நிற டிக்

கோல்டு நிற டிக் தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கு கிரே அதாவது சாம்பல் நிற டிக், பிரபலங்கள் அல்லது தனிநபர் ஆகியோருக்கு ப்ளூ நிற டிக் என்ற நடைமுறை இனி தொடர உள்ளது.

Twitter : டிவிட்டரில் புதிய வெரிஃபிகேசன் கொள்கைகள் அமல்; என்னென்ன மாற்றங்கள்; இதைப் படிங்க!

பெப்சியின் டிவிட்டர் கணக்கின் ப்ரைம் ஐகான் சதுரமாக இருக்கும். கோல்டன் நிற டிக் உடன் இருக்கும். இதற்கு அர்த்தம். இந்த கணக்கு டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிசினஸ் டிவிட்டர் கணக்கு என்று அர்த்தம்.

க்ரே டிக்:

கிரே டிக் மற்றும் ’official’ என்ற லேபிள் கட்டணம் செலுத்தி வாங்க முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ’official' என்ற லேபிள் அரசு சார்ந்த ட்விட்டர் அக்கவுண்ட்கள், வணிக ரீதியிலான நிறுவனங்கள், பெரும் செய்தி ஊடகங்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிரபலமானவர் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று டிவிட்டர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Twitter : டிவிட்டரில் புதிய வெரிஃபிகேசன் கொள்கைகள் அமல்; என்னென்ன மாற்றங்கள்; இதைப் படிங்க!

உதாரணமாக, இந்தியாவின் பிரதமர் அலுவலகத்தின் டிவிட்டர் கணக்கில் 'PMO India' பெயருக்கு அருகில் க்ரே நிற டிக் இருக்கும். அதோடு ‘ஃப்ளாக்’ குறியீடோடு 'India Governent organization' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget