மேலும் அறிய

Spot the Station: இனி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நேரில் கண்டுகளிக்கலாம்; நாசா செயலி அறிமுகம்- விவரம்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நேரில் கண்டுகளிக்கும் வகையில், நாசாவின் ஆன்ராய்டு செயலி நவீனமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நேரில் கண்டுகளிக்கும் வகையில், நாசாவின் ஆன்ராய்டு செயலி நவீனமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ’ஸ்பாட் தி ஸ்டேஷன்’ (Spot the Station) என்று இந்த செயலி அழைக்கப்படுகிறது. 

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை, அது கடந்து செல்லும் பாதையைப் பார்ப்பதற்காக பிரத்தியேக செயலி ஒன்று பயன்பாட்டில் இருந்தது. தற்போது சாதாரண பொது மக்களும் நுண் புவியீர்ப்பு ஆய்வகம் பற்றிய செய்திகளைக் காணும் வகையில் செயலியை நாசா மேலும் மெருகூட்டி உள்ளது. இந்த செயலியை  iOS மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்து  பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:

’’பொதுமக்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தி, கூடுதல் சிறப்புகள் மற்றும் தகவல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு இச்செயலி  உருவாக்கப்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆக்மென்டட் ரியாலிட்டி  மூலம் பொது மக்கள், மாணவர்கள், அறிவியல் தன்னார்வலர்கள் சர்வதேச விண்வெளி  நிலையத்தைக் காண்பது எளிமையாவதுடன், அவர்கள் பார்க்கும் படங்களையும், வீடியோக்களையும் எளிதில்  பகிரவும் முடிகிறது. ஆக்மென்ட்டட் ரியாலிட்டி என்ற அறிவியல் பயன்பாட்டின் மூலம் உள்ளமைக்கப்பட்ட திசைகாட்டி, விண்வெளி நிலையம் எங்குள்ளது என்பதை உங்களுக்குக் காண்பிக்கும் ,மேலும் நீங்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும்  உங்களின் சரியான இருப்பிடத்தின் அடிப்படையில், அடுத்ததாக எப்போது உங்கள் இருப்பிடத்திற்கு மேலே வரும் என்பதை அறிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாக சரியான நேரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எப்போது உங்கள் பகுதியில் தெரிகிறது என்பதை அறிந்துகொண்டு அதை உற்று நோக்க முடியும் என்று நாசாவின் ராபின் கேட்டன்ஸ் கூறுகிறார்.

வெறும் கண்களால் கூடப் பார்க்க முடியும் 

சந்திரன் எவ்வாறு சூரிய ஒளி பெற்று பிரதிபலிக்கிறதோ அதைப்போலவே, சர்வதேச விண்வெளி நிலையத்தை நாம் வெறும் கண்களால்கூடப் பார்க்க முடியும். ஏனெனில் அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கிறது. ஆனால்  சந்திரனைப் போல, விண்வெளி நிலையம் பகலில் பார்க்கும் அளவுக்கு பிரகாசமாக இல்லை. உங்கள் இருப்பிடத்தில் விடியற்காலையில் அல்லது அந்தி சாயும்போது மட்டுமே பார்க்க முடியும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருட்டாக இருக்க வேண்டும். அப்போதுதான் பார்க்க முடியும். 

இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் ஒரு முறை பூமியை சுற்றிவர தோராயமாக 90 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. ஆகவே, ஒரு நாளில் 16 முறை பூமியை சுற்றி வருவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் காண முடியும்.

எவ்வாறு கண்டறிவது?

மேலும் விண்வெளி நிலையம் மேலே செல்ல வேண்டும் என்பதால், இது ஒரு மாதத்திற்கு ஒரு முறை , பல வாரங்களுக்கு ஒரு முறையாக இருக்கலாம். ’ஸ்பாட் தி ஸ்டேஷன்’ மொபைல் செயலி மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் எப்போது உங்கள் பகுதியின் வானத்தில் உள்ளது மற்றும் அதை எவ்வாறு கண்டறிவது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நாசாவின் விண்வெளி செயல்பாட்டு பணி இயக்குநரகத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத் திட்டம் மற்றும் ஏஜென்சியின் ஸ்பேஸ் டெக்னாலஜி  திட்ட இயக்குநரகத்தின் மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது சர்வதேச விண்வெளி நிலைய செயல்பாடுகளின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னரே வெளியிடப்பட்டது.
  
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் தன்னார்வலர்கள், விண்வெளி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலைய செயலியை தங்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம். செய்து பல்வேறு தகவல்களைப் பெறுவதோடு நமது பகுதிக்கு மேலே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் வரும்போது அதை உற்றுநோக்கவும் முடியும்’’ என்று கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார். 

விண்வெளி நிலையம், அதன் ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய https://spotthestation.nasa.gov/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget