Whatsapp : ஐபோன் வாடிக்கையாளரா நீங்க ! இனி இந்த மாடல் ஐபோன்களில் எல்லாம் WhatsApp இயங்காது !
Apple iPhone 5 அல்லது iPhone 5C இல் மட்டும் iOS மற்றும் WhatsApp இரண்டையும் புதுப்பித்த பிறகு WhatsApp அணுகல் கிடைக்கும் . ஆனால்..
ஐபோனில் இயங்குதளத்தை புதுப்பிக்காத சில மாடல்களில் , வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் என்பது தரமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்று. இதில் இருக்கும் தனிநபர் பாதுகாப்பு அம்சத்தை பொருத்தும் பலருக்கும் இது ஃபேவரெட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் உங்கள் ஐபோனை பழைய iOS உடன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் விரைவில் அப்டேட் செய்துவிடுங்கள் இல்லையென்றால் இன்றோடு , அதாவது தீபாவளியோடு உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் அணுகலை நீங்கள் இழக்க நேரிடலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் iOS 10 மற்றும் iOS 11 இல் இயங்கும் ஐபோன் சாதனங்கள் அக்டோபர் 24 முதல் WhatsApp ஐ ஆதரிப்பதை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
iOS 10 மற்றும் iOS 11 பயனாளர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது எப்படி ?
வாட்ஸ் அப் ஆனது தொடர்ந்து தனது செயலியின் தரத்தை அதிகரித்து வருவது நாம் அறிந்ததே . ஆப்பிள் சமீபத்தில் ஐஓஎஸ் 16 ஐ அறிமுகப்படுத்திவிட்டது. ஒவ்வொரு முறையும் தனது ஐபோன் மாடலுக்கான புதுப்பித்தல்களை ஆப்பிள் வழங்குவது வழக்கம். ஆனால் அதனை சிலர் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது கிடையாது. ஆனால் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை புதுப்பித்தல் செய்வார்கள். இதுதான் வாட்ஸ்அப் அனுகலை பெறாமல் போவதற்கான முக்கிய காரணம் .வாட்ஸ்அப்பும் ஐஓஎஸ் 12 பதிப்புகளுக்கு பிறகு இருக்கக்கூடிய ஐபோன்களில் மட்டும்தான் வாட்ஸஅப் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது.எனவே iOS 10 மற்றும் iOS 11 ஐ பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த விரும்பினால் உடனடியாக உங்களது ஐஓஎஸ்-ஐ அப்டேட் செய்ய வேண்டியது அவசியம்.
மற்றொரு முக்கியமான செய்தி Apple iPhone 5 அல்லது iPhone 5C இல் மட்டும் iOS மற்றும் WhatsApp இரண்டையும் புதுப்பித்த பிறகு WhatsApp அனுகல் கிடைக்கும் . ஆனால் நீங்கள் ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4S ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு அப்டேட் செய்தாலும் வாட்ஸ்அப் கிடைக்காது.
எப்படி ஐஓஎஸ்-ஐ அப்டேட் செய்வது ?
முதலில் உங்கள் ஐபோனின் Settings வசதிக்கு செல்லவும்.
அங்கு General என்னும் வசதியை க்ளிக் செய்யவும்.
அதன் பிறகு Software Update என்னும் வசதியை க்ளிக் செய்து, புதிய ஐஓஎஸ் பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் . பின்னர் உங்கள் மொபைலில் 50% க்கு மேல் அல்லது சார்ஜிங் இணைப்பில் வைத்துக்கொண்டு ஐஓஎஸ்ஸை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
ஆண்ட்ராய்ட் மொபைலை பொருத்தவரையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்பை ஆதரிக்கும்.