பட்ஜெட் விலையில் Redmi ஸ்மார்ட் போன்: சிறப்பு அம்சங்கள் இதோ...!
இந்தியாவில் Redmi நிறுவனத்தின் Redmi 9 ஆக்டிவ் மற்றும் Redmi 9 ஏ ஸ்போர் மாடல் ஸ்மாட்போன்ககளை Mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசான் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு Redmi 9 ஆக்டிவ் மற்றும் Redmi 9 ஏ ஸ்போர்ட் மாடலில் சந்தையில் இன்று முதல் விற்பனையாகிறது.
ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் குறைந்தவிலையில் அதிக அம்சங்களைக்கொண்டுள்ளதாக என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது மக்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக உள்ளது ரெட்மி.. தற்போது சந்தையில் பல மாடல்களில் விற்பனை செய்துவரும் நிலையில், வாடிக்கையாளர்களின் எண்ணத்தை நிவர்த்தி செய்யும் வகையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக Redmi 9 ஆக்டிவ் மற்றும் Redmi 9 ஏ ஸ்போர்ட் மாடலில் இன்று முதல் விற்பனையாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.
Redmi 9 ஆக்டிவ் போனின் சிறப்பம்சங்கள்:
Redmi 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் மற்ற வழக்கமான நிறத்தினை விட புதிய மெட்டாலிக் பர்பிள் கலர் வேரியன்டுகளுடன் விற்பனைக்கு வரவுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Redmi 9 ஆக்டிவ் போன் 6 GB மற்றும் 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 4 GB +64 GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் கிடைக்கப்பெறுவதால் வாடிக்கையளர்களின் வசதிக்கேற்ப வாங்கிக்கொள்ளமுடியும். மேலும் Redmi 9 ஸ்மார்ட்போன்களைப்போலவே பிங்கர் பிரிண்டர் சென்சாரும் உள்ளது.
ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
13 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக்கொண்ட டூயல் ரியர் கேமரா வசதியைப் பெற்றுள்ளது.
இந்த Redmi 9 ஆக்டிவ் போனினில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில், மக்கள் அதிகளவில் எதிர்ப்பார்க்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 12 க்கு வெளியே இயங்குகிறது. தற்போது 4 ஜி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூபாய் 9,499 எனவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூபாய் 10,999 க்கு விற்பனையாகவுள்ளது.
Redmi 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
Redmi 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனைப்போன்று Redmi 9ஏ ஸ்போர்ட்டிலும் மெட்டாலிக் ப்ளு கலர் ஆப்சனில் கிடைக்கிறது
2 GB+32 Ram மற்றும் 3 GB ரேம் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மீடியாடெக் ஹீலியா G25 SoC, பின்புறத்தில் சிங்கிள் 13 மெகாபிக்சல் ரியல் கேமரா, 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் Redmi நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஸ்மாட்போன்கள் Mi.com, Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் அமேசான் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.