ஐஃபோன் 12 மினி Vs ஐஃபோன் SE... எதை வாங்கலாம்? ஒப்பீடு இதோ..!
ஐஃபோன் 12 மினி, ஐஃபோன் SE ஆகிய இரண்டு மாடல்களில் எதை வாங்குவது? இங்கு நாங்கள் ஒப்பிட்டதில், ஐஃபோன் SE மாடல் வாங்குவது சிறப்பான தேர்வாக அமையும். அதற்கான காரணங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
கடந்த ஆண்டு வெளியான ஐஃபோன் 12 மினி மாடலை வாங்கலாமா? புதிதாக வெளியாகியிருக்கும் ஐஃபோன் SE மாடலை வாங்கலாமா? ஐஃபோன் வாங்குவதற்காக 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்படுவது இயல்பு. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஃபோன் SE ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பீட்டளவில் குறைவான விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐஃபோன் 12 மினி மாடல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதோடு, ஐஃபோன் 12 மாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த இரண்டு மாடல்களில் எதை வாங்குவது? இங்கு நாங்கள் ஒப்பிட்டதில், ஐஃபோன் SE மாடல் வாங்குவது சிறப்பான தேர்வாக அமையும். அதற்கான காரணங்களை இங்கே கொடுத்துள்ளோம்...
விலை குறைவு!
தற்போதைய 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள ஐஃபோன் SE மாடலின் விலை 43,990 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சில மாதங்களில் குறையும் எனவும் கூறப்படுகிறது. அதே வேளையில், ஐஃபோன் 12 மினி மாடலின் விலை 49,990 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, அதன் மீது அதிகபட்ச தள்ளுபடியோடு, சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முடியும். எனவே விலை என்ற அடிப்படையில், ஐஃபோன் 12 மினி மாடலை விட ஐஃபோன் SE குறைந்த விலையில் கிடைக்கிறது.
வேகமான பிராசஸர் சிப்!
ஐஃபோன் SE மாடலில் பொருத்தப்பட்டுள்ள A15 பயோனிக் சிப் ஒப்பீட்டளவில் ஐஃபோன் 12 மினி மாடலில் கொடுக்கப்பட்டுள்ள A14 சிப்பை விட வேகமானதும், உயர்வானதும் ஆகும், இதன் பயன்பாட்டில் வேகம் முழுமையாக தெரியாது என்ற போதும், சற்றே வேகமான ஃபோன்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
ஐ.ஓ.எஸ் பயன்பாடு கூடுதலாக கிடைக்கிறது!
A15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளதால் ஐஃபோன் SE மாடலுக்கு 6 ஆண்டுகள் கூடுதலாக ஐ.ஓ.எஸ் அப்டேட் கிடைக்கிறது. ஐஃபோன் 12 மினி மாடலில் உள்ள ஐ.ஓ.எஸ் ஆபரேடிங் சிஸ்டத்திற்கு ஓராண்டுக்குக் குறைவாகவே அப்டேட் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
கையில் பிடித்துக் கொள்ள வசதியாக இருக்கிறது!
ஐஃபோன் SE மாடலில் பக்கவாட்டில் வடிவமைப்பு வட்ட வடிவில் இருப்பதால், ஐஃபோன் 12 மினி மாடலின் சதுர வடிவை விட கையில் பிடித்துக் கொள்ள வசதியாக இருப்பதாக இந்த மாடல்களைப் பயன்படுத்துவோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
`ஹோம்’ பட்டன்!
ஐஃபோன் SE மாடலில் கொடுக்கப்பட்டுள்ள `ஹோம்’ பட்டன் மூலமாக எளிதாக ஐஃபோனைப் பயன்படுத்த முடியும். தினமும் பயன்படுத்தப்படும் முக அடையாள சரிபார்ப்பு முறையைவிட இது எளிதானது.
கிடைக்கக்கூடியது!
ஐஃபோன் SE மாடல் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதே வேளையில், ஐஃபோன் 12 மினி மாடல் கிடைப்பது அரிதாக இருக்கிறது.