Tata Neu : டாடாவின் அடுத்த மூவ்! அதிர்ச்சியில் போன்பே,கூகுள்பே.. ஷாப்பிங்கும் உண்டு! பக்கா ப்ளான்!
விரைவில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலிக்கான பதிவிறக்கம் செய்யும் வசதி கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உலகில் தற்போது கால்பதிக்கிறது டாடா. Tata Neu என்ற மொபைல் செயலியை வரும் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஷாப்பிங், டிக்கெட் புக்கிங், பணப்பரிமாற்றம் என அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி சென்ற பலே திட்டத்துடன் இந்த ஆப் அறிமுகமாகவுள்ளது. தற்போது டாடா குரூப் ஊழியர்களிடம் மட்டும் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
என்னென்ன வசதி?
விரைவில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலிக்கான பதிவிறக்கம் செய்யும் வசதி கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மளிகைப்பொருட்கள் ஆன்லைனில் வாங்கவும் மின்னணு பொருட்கள், வணிகம், விமான டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல சேவைகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது பணபரிவர்த்தனையில் கோலோச்சும் கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக Tata Neu இருக்கும்.
பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங்கும் இந்த செயலியின் கீழ் வருவதால் பல்வேறு முக்கிய நிறுவனங்களுடன் இந்த செயலி கூட்டு வைத்துக்கொள்ளும். குறிப்பாக டாடாவே பல்வேறு நிறுவனங்களையும், விற்பனை கடைகளையும் நடத்தி வருவதால் மிகவும் ஈசியான வேலையாகவே இருக்கும். அதாவது ஏர் ஏசியா, ஏர் இந்தியா ஆகியவற்றில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், தாஜ் குழும ஓட்டல்களின் முன்பதிவு, மருந்துப்பொருட்கள், குரோமாவில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள், வெஸ்ட்சைட் ஆடைகள் என அனைத்து ஆன்லைன் ஷாப்பிங்கை ஒரே செயலிக்குள் கொண்டு வரவுள்ளது.
வெறும் 6 நிமிடங்கள் போதும்.. Burger செய்து அசத்தும் தானியங்கி ரோபோ.. க்யூட் அப்டேட்ஸ்..
கடும் போட்டி..
பல்வேறு துறைகளில் கோலோச்சும் டாடா தற்போது டிஜிட்டல் ஆன்லைனில் கால்பதிப்பதால் ஏற்கெனவே துறையில் உள்ள போன்பே, கூகுள், பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்குமென தெரிகிறது. போட்டி அதிகரிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளித்தூவவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் சில சேவைகளுடன் Tata Neu களமிறங்கினாலும் போகப்போக அப்டேட்கள் கொடுக்கப்படுவது புதுப்புது சேவைகளை இணைப்பது போன்ற விஷயங்களையும் எதிர்பார்க்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
ஆவி பெயரை வைத்து மிரட்டி 6 மாதம் பாலியல் வன்கொடுமை - போலிச் சாமியாருக்கு போலீஸ் வலை
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்