(Source: ECI/ABP News/ABP Majha)
Windows 11 | உங்கள் கம்ப்யூட்டரில் `விண்டோஸ் 11’ இன்ஸ்டால் செய்ய வேண்டுமா? வழிமுறைகள் இதோ..!
விண்டோஸ் புதிய வெர்ஷன் `விண்டோஸ் 11’ தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உங்கள் சிஸ்டம் தானாகவே அப்டேட் ஆகும் வரை காத்திருக்காமல், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்தின் புதிய வெர்ஷன் `விண்டோஸ் 11’ தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் இந்தப் புதிய விண்டோஸ் 11 அடுத்த சில நாள்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் சிறப்பம்சமாக அதன் UI புதிதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது; இதில் புதிய ஆப் ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Teams integration, ஆண்ட்ராய்ட் ஆப்களை நேரடியாகப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பயனாளர்கள் தங்கள் சிஸ்டத்தை `விண்டோஸ் 11’ அப்டேட் செய்வதற்குக் காத்திருக்கும் சூழலில், அதனை உடனே அப்டேட் செய்ய ஒரு வழியுண்டு.
விண்டோஸ் 11 உங்கள் சிஸ்டத்தில் வேலை செய்ய வேண்டுமெனில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் system requirement standardsக்கு ஏற்ப உங்கள் சிஸ்டம் இருக்க வேண்டும். எனினும், இதன் பொருள் பழைய கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பது அல்ல. பழைய கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர் தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டத்தின் ISO fileஐ முதலில் இன்ஸ்டால் செய்து, பிறகு நீங்களாகவே விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டத்தையும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம் என ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் சிஸ்டத்திற்கான விண்டோஸ் 11 வெளியிடப்பட்டுவிட்டதா என்பதைப் பரிசோதிக்க, பயனாளர்கள் Settings சென்று, Windows Update என்ற ஆப்ஷனில் செக் செய்து கொள்ளலாம். உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 11 வேலை செய்யுமா என்பதைப் பரிசோதிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் PC Health App டவுன்லோட் செய்து பயன்படுத்தி, தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் PC Health App உங்கள் கம்ப்யூட்டர் புதிய ஆபரேடிங் சிஸ்டத்திற்குத் தயாராக இருக்கிறது என்று காட்டினால், உங்கள் சிஸ்டம் தானாகவே அப்டேட் ஆகும் வரை காத்திருக்காமல், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- முதலில் விண்டோஸ் 11 சாஃப்ட்வேரின் அதிகாரப்பூர்வ டவுன்லோட் பக்கத்திற்குச் செல்லவும்.
- அடுத்ததாக, Windows 11 Installation Assistant என்ற உதவியைப் பயன்படுத்தி, `Download Now’ என்ற இடத்தில் க்ளிக் செய்து, கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- “Create Windows 11 Installation Media" என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி, USB drive அல்லது DVD ஆகியவற்றை bootable ஆக மாற்றிக் கொள்ளலாம்.
- இறுதியாக, கொடுக்கப்பட்டிருக்கும் டிஸ்க் படத்தைக் க்ளிக் செய்து, ISO file-ஐ டவுன்லோட் செய்து bootable mediaவாகவோ, நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யும் வசதியையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அதன்பிறகு கொடுக்கப்படும் உத்தரவுகளைப் பின்பற்றி, உங்கள் கம்ப்யூட்டரில் உடனடியாக விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.