Skype: கம்யூட்டரில் இருந்து போலீஸைக் கூப்பிடலாம்.. ஸ்கைப் கொடுத்த சூப்பர் அப்டேட்..!
ஸ்கைப் கணினி செயலி மூலம் அவசர கால அழைப்பு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிகமாக வீடியோ அழைப்பு செய்ய பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று ஸ்கைப். இந்த செயலி மூலம் உலகத்தில் பல்வேறு இடங்களில் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். இதன்காரணமாக இந்த செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி அவ்வப்போது வாடிக்கையாளார்களுக்கு ஏற்ற வகையில் சில புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது ஸ்கைப் செயலி மூலம் அவசர அழைப்பு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கெனவே ஆஸ்திரேலியா,டென்மார்க், ஃபின்லாந்து,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த வசதி அமெரிக்காவிலும் முதல் முறையாக செயல்பட உள்ளது.
இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணினியில் இருக்கும் ஸ்கைப் செயலி மூலம் அவசர கால அழைப்பை செய்ய முடியும். இந்த கணினியில் இருக்கும் இணையதள வசதியை நம்முடைய இடத்தை அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் மொபைல் போன் இல்லாமலே அவசர கால அழைப்பு செய்ய முடியும்.
இவை தவிர வேறு சில அப்டேட்களும் சேர்ந்து வந்துள்ளன. அதன்படி ஸ்கைப் 8.80 வெர்ஷனில் இனிமேல் 5 நிமிடங்கள் வரை வாய்ஸ் குறுஞ்செய்தி அனுப்ப முடியும். இதற்கு முன்பாக வெறும் 2 நிமிடங்கள் வரை மட்டுமே வாய்ஸ் குறுஞ்செய்தி அனுப்ப முடியும். மேலும் ஒரு ஸ்கைப் அழைப்பில் இருக்கும் போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய லைட் மோடையும் மாற்ற முடியும். அத்துடன் ஸ்கைப் அழைப்பு மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்யும் போது ஸூம் செய்யும் வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 911 என்ற அவசர கால அழைப்பை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அழைப்பை தற்போது ஸ்கைப் கணினி செயலி மூலம் செய்ய முடியும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று இந்தியாவில் விரைவில் அவசர கால அழைப்பு செய்யும் வசதி வரும் என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:உஷார்.! எல்லாமே போலி.. இந்திய இ-வர்த்தக தளத்தை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா!