Samsung A56: சாம்சங்கின் புதிய ’A’ சீரிஸ் அறிமுகம் - சிறப்புகள் என்னென்ன?
Samsung Galaxy A56: சாம்சங் A56 அல்ட்ரா மாடல் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்.

பிரபல சாம்சங் நிறுவனம் A சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy A 26, Galaxy A36 and Galaxy A56 ஆகிய மூன்று மாடல்களை வெளியிட்டுள்ளது.
சாம்சங் வெளியிட்டுள்ள A சீரிஸ் மாடலில் ஆறு ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட், ஏ.ஐ. அம்சங்கள் என அறிமுகப்படுத்தியுள்ளது. ஜனவரியில் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் வெளியிட்டிருந்தது.
சாம்சங் Galaxy A56
சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள Galaxy A 26, Galaxy A36 and Galaxy A56 6.7 இன்ச் டிஸ்ப்ளே முழு HD+ Super AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட்,1900 nits பீக் பிரைட்னஸ்,1200 nits ஹை பிரைட்னஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாடல்களும் IP67 ரேட்டிங்கள் கிடைத்துள்ளது. இந்த வசதி மூலம் தண்ணீரில் 1 மீட்டர் அளவு ஸ்மாட்ஃபோன்களை 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். OneUI 7.0 ஏ.ஐ. கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்ராய்ட் 15 சாஃட்ப்வேர் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு, ஆறு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட் வழங்குகிறது.
சாம்சங் Galaxy A56 Exynos 1580 ப்ராசசர் அதோடு க்ராபிக் இன்டெசிவ் டாஸ்க்குகள் செய்தற்கு வசதிக்கு திறன்களை கொடுத்துள்ளது. 8/12GB RAM 128/256GB என்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Galaxy A56 கேமராவில் ப்ரைமரி 50MP, 12MP அல்ட்ரா வைட் லென்ஸ், 5MP மேக்ரோ லென்ஸ் கிடைக்கிறது. செல்ஃபி கேமரா 12MP கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கால் க்ளாரிட்டியுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A56 மற்றும் A36 மாடலில் டிஸ்ப்ளேவில் ஃபிங்கர் ப்ரிண்ட், 5G, 4G VolTE, Bluetooth 5.3, GPS + GLONASS, மற்றும் NFC ஆகியவை உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை மூன்று மாடல்களிலும் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் A56 , A36 இரண்டு மாடல்களும் 45W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.
Galaxy A56, லைட்க்ரே, க்ரைபைட், ஆலிவ், பிங்க் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.50,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களின் விலை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சாம்சங் வெளியீட்டு நிகழ்வில் விலை குறித்த விவரம் தெரியவரும்.
மேலும் வாசிக்க..
Samsung Galaxy S25 Ultra: சாம்சங் S25 மொபைல் வாங்கும் திட்டம் இருக்கா? தள்ளுபடி அறிவிப்பு!

