மேலும் அறிய

RealMe Days | 5 நாட்கள்.. அதிரடி விலை குறைப்பு.. ரூ.17000 வரை தள்ளுபடி.. அள்ளிக்கொடுக்கும் ரியல்மி!

ஸ்மார்ட்ஃபோன் விற்பனையை தூக்கி நிறுத்தும் விதமாக அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது ரியல்மி.

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக்காலக்கட்டத்தில் பட்ஜெட் போன்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நிறுவனம் ரியல்மி. சில போன் மாடல்களுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் சிறு சிறு மாற்றங்களை செய்து அடுத்தடுத்து பல மாடல்களை சந்தையில் இறக்கியது ரியல்மி. விலைக்கேற்ப சிறப்பம்சங்கள், திடீர் தள்ளுபடிகள் என வாடிக்கையாளர்களை தன் வசப்பத்தும் ரியல்மி, இந்த ஊரடங்கு நேரத்தில் சற்று அமைதி காத்தது. சில மாடல்களின் ரிலீஸ் கூட தள்ளிவைக்கப்பட்டது. 'இந்த கடினமான சூழலில் தோள்கொடுக்கவே கவனம் செலுத்துவோம். திடமாக இருங்கள். வீட்டில் இருங்கள். நாம் மீண்டு வருவோம்' என தெரிவித்தது. பின்னர் நிலைமை சற்று சீரான நிலையில் சில மாடல்களும் வெளியாகின. 

RealMe Days | 5 நாட்கள்.. அதிரடி விலை குறைப்பு.. ரூ.17000 வரை தள்ளுபடி.. அள்ளிக்கொடுக்கும் ரியல்மி!

இந்நிலையில் சற்று சரிந்துள்ள போன் விற்பனையை தூக்கி நிறுத்தும் விதமாக அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது ரியல்மி. ரியல்மியின் இணையதளப்பக்கம், மற்றும் ப்ளிப்கார்ட் பக்கத்தில் இந்த அதிரடி ஆஃபர்கள் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  போன் மாடலுக்கு ஏற்பரூ.750 முதல் ரூ.17000வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5 முதல் ஜூலை 9 வரை இந்த தள்ளுபடி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. realme 7 Pro மாடலுக்கு ரூ.4ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. X7 Pro 5G மாடலுக்கு  ரூ.3ஆயிரம், realme 7 Pro மாடலுக்கு ரூ.4ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

narzo 30A (3GB) மாடலுக்கு ரூ.750 தள்ளுபடி என ரியல்மி குறிப்பிட்டுள்ளது. அதேபோல் narzo 30 Pro மாடலுக்கு ரூ.1500 தள்ளுபடியும், realme C12, realme C15, and realme C15 ஆகிய மாடல்களுக்கும் தலா ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக  realme X50 Pro மாடலுக்கு ரூ.17000 தள்ளுபடி என கூறப்பட்டுள்ளது.

RealMe Days | 5 நாட்கள்.. அதிரடி விலை குறைப்பு.. ரூ.17000 வரை தள்ளுபடி.. அள்ளிக்கொடுக்கும் ரியல்மி!

 realme X7 Pro 5G மாடலுக்கு ரூ.3 ஆயிரம் தள்ளுபடி என கூறப்படுள்ளது. realme X3 SuperZoom ரூ.6ஆயிரம் தள்ளுபடியிலும், realme X7 5G ரூ.2 ஆயிரம் தள்ளுபடியிலும் கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தள்ளுபடிகள் போல, எஸ்பிஐ கிரெடிட் கார்ட் மற்றும் இஎம்ஐ மூலம் realme C25, realme 8 5G, realme 8 pro, narzo 20, narzo 30 5ஜி ஆகிய மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி 10%தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நாட்கள் என்ற பெயரில் இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ள அந்நிறுவனம் கொரோனா காலத்தில் சரிந்த சந்தையை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறது. செல்போன் வாங்க யோசித்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை நிச்சயம் இந்த அதிரடி ஆஃபர்கள் கவரும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

YouTube Play Buttons: யூடியூப் ‛பட்டன்’ விருதுகள் பற்றி தெரியுமா? டைமண்ட் மட்டுமல்ல... அதுக்கும் மேல....!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget