PUBG Update: ’எப்போதுமே டாப்தான்’ டவுன்லோட் நம்பரில் ரெக்கார்டு படைத்த பப்ஜி நியூ ஸ்டேட்..
தென்கொரியாவின் கிராஃப்டான் இன்க் நிறுவனத்தின் செயலியான இது, புது அப்டேட்டையும் அனுப்பி இருக்கின்றது.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியவுடன், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஸ்மார்ட்போன்களில் ஆப்களை இன்ஸ்டால் செய்வது உயர்ந்தது. லாக்டவுன் காலத்தில் வீட்டில் பொழுதைக் கழிக்க அதிகளவில் ஆப்களை இன்ஸ்டால் செய்த மக்கள் விளையாட்டு செயலிகளை அதிக அளவில் பதிவிறக்கம் செய்தனர்.
இதில், பப்ஜி செயலி அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இருக்கின்றது. இந்நிலையில், இன்று வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 45 மில்லியனுக்கும் அதிகமானோர் பப்ஜி நியூ ஸ்டேட் செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். தென்கொரியாவின் கிராஃப்டான் இன்க் நிறுவனத்தின் செயலியான இது, புது அப்டேட்டையும் அனுப்பி இருக்கின்றது. புது அப்டேட்டுடன் கூடிய இந்த செயலியை, ஆண்டுராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இப்போதுதான் ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. இது உலக பப்ஜி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.
The latest #PUBGNEWSTATE update is here!
— PUBG: NEW STATE (@PUBG_NEWSTATE) December 16, 2021
Check out everything new hitting the Battlegrounds 👇 https://t.co/VirvuPSDV3#NewStatePatchNotes pic.twitter.com/AAkaelooYJ
முன்னதாக, இந்தியாவின் பட்டித்தொட்டி எங்கும் பப்ஜியின் நீட்சியை பார்க்க முடியும். ஆனால் சீனா, செயலிகள் மூலமாக இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மேலும் படிக்க: Instagram Update | செம்மையா இருக்குமே!! இன்ஸ்டா ஸ்டோரியில் வருகிறது சூப்பர் அப்டேட்..
இந்த அறிவிப்பு பப்ஜி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தாலும் , அதன் பிறகு CALL OF DUTY, FAUG-G என நிறைய மொபைல் கேம் சந்தைப்படுத்தப்பட்டது. பல கேமிங் நிறுவனங்கள் இந்தியாவை குறிவைத்தே பல மொபைல் கேமினை களமிறக்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் பப்ஜி ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை, பப்ஜியை விட சிறந்த விளையாட்டை தங்கள் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற போட்டா போட்டி கேமிங் நிறுவனங்கள் மத்தியில் இன்றளவும் உள்ளது.
இதனால், இந்தியாவில் பப்ஜி விளையாட்டின் பெயரை "BATTLE GROUND INDIA” என க்ராஃப்டான் நிறுவனம் அறிமுகம் செய்தது . Battlegrounds Mobile India என்ற பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்