e-RUPI Digital Payment: கிரெடிட் கார்டும் வேண்டாம்.. டெபிட் கார்டும் வேண்டாம்.. பிரதமர் தொடங்கிய இ-ரூபி சேவை!
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு வவுச்சர் மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும்
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இ-ருபி பற்றி: இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் தொடர்பில்லா சாதனம். இது க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு -சான்றாகும் (மின்னணு வவுச்சர்). இது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு வவுச்சர் மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும். இதை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இ-ருபி, இந்த சேவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்களை(sponsors of the services), பயனாளிகளுடன் இணைக்கிறது மற்றும் சேவை அளிப்பவர்களையும் நேரடி தலையீடு இன்றி டிஜிட்டல் முறையில் இணைக்கிறது. பரிவர்த்தனை முடிந்தால் மட்டுமே, சேவை அளிப்பவருக்கு பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. முன்கூட்டியே பணம் செலுத்தப்படும்(ப்ரீ-பெய்டு) முறையாக இது இருப்பதால், எந்த நடுவர் தலையீடும் இன்றி, சேவை அளிப்பவருக்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.
Thanks to technology, things which were earlier deemed impossible have become a reality.
— Narendra Modi (@narendramodi) August 2, 2021
Through eRUPI, numerous tech solutions, particularly in healthcare will be available. pic.twitter.com/szScb1gn5Y
Digital technology is transforming lives in a major way and is furthering ‘Ease of Living.’ At 4:30 PM tomorrow, 2nd August, will launch e-RUPI, a futuristic digital payment solution which offers several benefits for its users. https://t.co/UpLgtBl1K3
— Narendra Modi (@narendramodi) August 1, 2021
நலன்சார்ந்த சேவைகளை வழங்குவதில் ஆதார கசிவு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், இது புரட்சிகரமான முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய் சேய் நலத்திட்டங்கள், டி.பி ஒழிப்பு திட்டங்கள், ஆயுஸ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் பரிசோதனை, உர மானியம் போன்ற திட்டங்களின் சேவைகளை வழங்கவும் இதை பயன்படுத்த முடியும். ஊழியர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த டிஜிட்டல் சான்றுகளை தனியார் நிறுவனங்கள் கூட பயன்படுத்த முடியும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
Tokyo Olympics: ஒலிம்பிக் வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் 6ஆவது இடம்!