Tokyo Olympics: ஒலிம்பிக் வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் 6ஆவது இடம்!
டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் ஆகியோர் பங்கேற்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத்தில் இன்று மகளிர் வட்டு எறிதலுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் சீமா புனியா மற்றும் கமல்பிரீத் கவுர் ஆகிய இருவரும் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் 64 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என இருந்தது. இதில் குரூப் பி தகுதிச் சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பங்கேற்றார். அதில் இவர் தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்குதகுதிப் பெற்று அசத்தினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கமல்பிரீத் கவுர் பங்கேற்றார். அதில் தன்னுடைய முதல் வாய்ப்பில் அவர் 61.62 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் கவுர் ஃபவுல் செய்தார். மூன்றாவது வாய்ப்பில் கமல்பிரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் வீசி 6ஆவது இடத்திற்கு முன்னேறினார். முதல் மூன்று வாய்ப்புகளுக்கு பிறகு கடைசி 4 இடத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் மீதம் இருந்த 8 வீராங்கனைகள் நான்காவது வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இந்தியா வீராங்கனை கவுர் ஃபவுல் செய்தார். ஐந்தாம் வாய்ப்பில் அவர் 61.37 மீட்டர் தூரம் வீசினார். இறுதியில் ஆறாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அவர் ஃபவுல் செய்தார். இதனால் 6ஆவது இடம் பிடித்தார். தன்னுடைய சொந்த சிறப்பான தூரம் வீசியிருந்தால் அவருக்கு பதக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discus Thrower Kamalpreet Kaur misses OUT on a medal but wins hearts with her performance; Finished 6th with best attempt of 63.70m
— India_AllSports (@India_AllSports) August 2, 2021
Proud of your overall effort Kamalpreet
PS: Her PB 66.59m would have placed her at 4th pace #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ZQi3HABU1A
முன்னதாக முதல் நாளில் 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார்.பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பந்தைய தூரத்தை 50.77 நேரத்தில் கடந்து 7ஆவது இடத்தை பிடித்தார். தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற 4*400 மீட்டர் லப்பு ரிலேவில் இந்திய அணி தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேபோல் வட்டு எறிதலில் குரூப் ஏ பிரிவில் சீமா புனியா பங்கேற்றார். அவர் தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 60.57 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் மூன்றாவது வாய்ப்பில் 58.93 மீட்டர் தூரம் வீசினார். இதனால் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சீமா புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
மேலும் படிக்க:‛10 பேரை அடிச்சு டான் ஆகல... அடிச்ச 10 பேரும் டான்...’ இந்திய மகளிர் ஹாக்கியின் வீழ்ச்சியும்... எழுச்சியும் !