மேலும் அறிய

வேகமா ட்ரை ஆகுதா உங்க செல்போன் பேட்டரி? இதை செய்தால் சரியாகிடும்!

சில விஷயங்களை செல்போனில் சரியாக ஃபாலோ செய்தாலே போதும் செல்போன் பேட்டரியை காப்பாற்றிக்கொள்ள முடியும். என்ன அது? பார்க்கலாம்.

புது போன் வாங்கி இருக்கேன்னு நண்பர்கள் யாராவது சொன்னால், நம்முடைய முதல் கேள்வி விலை. அடுத்த கேள்விகள் கேமரா குறித்தும், பேட்டரி குறித்தும் தான். ‛எவ்ளோ நேரம்பா சார்ஜ் நிக்குதுனு,’ சார்ஜிங் கெபாசிட்டியை தெரிந்துகொள்வதுதான் இந்திய பயனாளர்களின் மனநிலை. அதைக் கருத்தில் கொண்டு தான் இன்று செல்போன் நிறுவனங்களும் தங்களது மாடல்களை சந்தையில் இறக்குகின்றன. அதிவேக சார்ஜர், நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி இவையெல்லாம் செல்போன் ரசிகர்களை கவரும் சிறப்பம்சங்கள். ஆனால் என்னதான் நல்ல நிறுவனம் என்றாலும், நாளாக நாளாக செல்போன் சார்ஜில் பிரச்னை வரத்தான் செய்கிறது. நல்லா சார்ஜ் நின்னுச்சு.. இப்போவெல்லாம் சீக்கிரம் ட்ரை ஆகிடுதுனு புலம்பும் ஆட்களுக்கு சில டிஸ்ப் சொல்லத்தான் இந்த செய்தி. 

100% வேண்டாம்:

வேகமா ட்ரை ஆகுதா உங்க செல்போன் பேட்டரி? இதை செய்தால் சரியாகிடும்!
 செல்போன் பேட்டரியின் ஆயுளை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க வேண்டுமானால் இதுதான் முக்கியமான பாய்ண்ட். செல்போனுக்கு சார்ஜ் போடுவது மிக முக்கியம், அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  செல்போன் முழுவதும் ட்ரை ஆகி, ஸ்விட்ச் ஆஃப் ஆகும் நிலைக்கு  சென்றவுடன் சார்ஜரை தேடக்கூடாது. 30% என்பது குறைந்தபட்ச அளவு. அந்த அளவு வந்துவிட்டாலே செல்போன் சார்ஜரை இணைத்துவிட வேண்டும். அதேபோல் முழு அளவை எட்டும் வரை சார்ஜ் செய்யக்கூடாது. 80% வந்துவிட்டாலே சார்ஜரை நீக்கிவிட்டு செல்போனை பயன்படுத்தலாம். விடிய விடிய சார்ஜ் போடுவது, சார்ஜரில் செல்போனை பல மணிநேரம் இணைப்பது போன்ற வேலை உங்கள் பேட்டரிக்கு உலை வைக்கும்.

சார்ஜர்:
ஒவ்வொரு பேட்டரிக்கும், செல்போன் நிறுவனத்திற்கும் தனித்தனி சார்ஜர் உண்டு. சி டைப் என்றாலும் வாட்ஸ் கணக்கு மாறுபடுகிறது. எனவே உங்கள் செல்போனுக்கான சார்ஜரை மட்டுமே எப்போதும் பயன்படுத்த வேண்டும். லேப்டாப்பில் சார்ஜ் செய்வது, கார், பைக்கில் சார்ஜ் செய்வது அவசரத்திற்கு சரி என்றாலும், அதனை வாடிக்கையாக செய்யக் கூடாது.

ஏரோபிளேன் மோடு:

வேகமா ட்ரை ஆகுதா உங்க செல்போன் பேட்டரி? இதை செய்தால் சரியாகிடும்!
ரேடியோ சிக்னல், இண்டர்நெட் எதுவும் இல்லாமல் உங்கள் செல்போனை பயன்படுத்தும் முறைதான் ஏரோபிளேன் மோடு. செல்போன் அழைப்புகள் ஏதும் வராது என்ற நேரங்களில் நீங்கள் ஏரோபிளேன் மோடு மூலம் செல்போனை பயன்படுத்தலாம். தேவையில்லாத நேரத்தில் இண்டர்நெட் வசதியை நிறுத்தி வைப்பதால் சார்ஜ் மிச்சமாகும். அதேபோல் இரவில் தூங்கும் நேரத்தில் கண்டிப்பாக இண்டர்நெட்க்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இண்டர்நெட் ஆஃப் செய்வதால் பல செயலிகள் இயங்காது. இதனால் செல்போன் முழு ஓய்வில் இருக்கும்.

டார்க் மோட்:
செல்போனில் லைவ் வால்பேப்பர் என்ற ஆப்ஷன் சார்ஜுக்கு எதிரி. சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்க வேண்டுமென விரும்புபவர்கள் லைவ் வால்பேப்பர் பக்கம் செல்லவே கூடாது. அதற்கு பதிலாக டார்க் வால்பேப்பரை பயன்படுத்தலாம். அதேபோல இப்போதெல்லாம் செயலிகளே டார்க் மோட் ஆப்ஷனை கொண்டு வந்துவிட்டன. முடிந்தவரை டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். டார்க் மோட் சார்ஜை சேமிக்கும். இதனால் வேகமாக பேட்டரி ட்ரை ஆவது தடுக்கப்படும்.
 
பிரைட்னஸ்:

வேகமா ட்ரை ஆகுதா உங்க செல்போன் பேட்டரி? இதை செய்தால் சரியாகிடும்!
சிலரது செல்போன் லாக்கை எடுத்தால் நமது  முகத்தில் பளிச்சென்று வெளிச்சம் அடிக்கும். செல்போனில் பிரைட்னஸை ஆட்டோ ஆப்ஷனில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் மட்டுமே அதிகமாக பிரைட்னஸை வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் அளவுக்கு ஏற்ற பிரைட்னஸ் இருந்தால் போதும். குறிப்பாக இரவுகளில் கண்ணுக்கு போதுமான அளவு பிரைட்னஸ் வைத்துக்கொண்டு  செல்போன் பயன்படுத்த வேண்டும்.

லொகேஷன்:
செல்போனில் உள்ள சில ஆப்ஷன்கள் எப்போதும் ரன்னிங்கிலேயே இருக்கும். அதாவது இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் நீங்கள் செல்போன் பயன்படுத்த வில்லை என்றாலும் சார்ஜ் குறைந்துகொண்டே இருக்கும். அதில் முக்கியமான ஒன்று லொகேஷன். 24 மணி நேரமும் செல்போனில் லொகேஷனை ஆன் செய்ய தேவையில்லை. லொகேஷன் தொடர்பான தேவைகள் இருந்தால் மட்டுமே லொகேஷனை ஆன் செய்து மீண்டும் ஆஃப் செய்துகொள்ளலாம். அதேபோல சில சோஷியல் மீடியாக்களில் ஆடோ ப்ளே முறையில் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அதனை நிறுத்தி வைக்கலாம். தேவையில்லாத செயலிகளை நீக்குவது செல்போனுக்கும், பேட்டரிக்கும் நல்லது. 

வேகமா ட்ரை ஆகுதா உங்க செல்போன் பேட்டரி? இதை செய்தால் சரியாகிடும்!

ரெஸ்ட் கொடுங்க:
செல்போனுக்கும் ரெஸ்ட் கொடுக்க வேண்டும். வாரத்திற்கு 1 மணி நேரமாவது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்க வேண்டும். நாம் பயன்படுத்தாத ஏதாவது ஒரு மணி நேரம் செல்போனுக்கு ஓய்வு கொடுத்தால் பேட்டரியின் ஆயுள் மட்டுமின்றி செல்போனின் ஆயுளும் கூடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: கடைசி ஓவரில் ரியான் பராக் காட்டடி.. டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு..!
RR vs DC LIVE Score: கடைசி ஓவரில் ரியான் பராக் காட்டடி.. டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு..!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: கடைசி ஓவரில் ரியான் பராக் காட்டடி.. டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு..!
RR vs DC LIVE Score: கடைசி ஓவரில் ரியான் பராக் காட்டடி.. டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு..!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget