Oneplus Nord 2 : அறிமுகமாகிறது ஒன்ப்ளஸ் நார்ட் 2 : எப்படி இருக்கு? சந்தை விலை என்ன?
சிவப்பு, க்ரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வுட்ஸ் என நான்கு முக்கிய நிறங்களில் அவை அறிமுகமாகிறது.
![Oneplus Nord 2 : அறிமுகமாகிறது ஒன்ப்ளஸ் நார்ட் 2 : எப்படி இருக்கு? சந்தை விலை என்ன? Oneplus nord 2 launch in India today: Price, specifications and More Know in Detail Oneplus Nord 2 : அறிமுகமாகிறது ஒன்ப்ளஸ் நார்ட் 2 : எப்படி இருக்கு? சந்தை விலை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/22/9d1c38a3d2c71e3ac8ffcf4b06f63b0c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒன் ப்ளஸ் போன் பயனாளர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒன் ப்ளஸ் நார்ட் 2 வகை போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. இவற்றில் 8GB + 128GB மெமரி உடைய நார்ட் போன்களின் சந்தை விலை ரூ.31999 மற்றும் 12GB + 256GB மெமரி உடைய நார்ட் போன்களின் சந்தைவிலை ரூ.34,999 எனக் கணிக்கப்பட்டுள்ளது.மேலும் சிவப்பு, க்ரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வுட்ஸ் என நான்கு முக்கிய நிறங்களில் அவை அறிமுகமாகிறது. நார்ட் போன்களுடன் ஒன்ப்ளஸ் ரக போன்களின் ப்ளூடூத் இயர்போன்களான ஒன்ப்ளஸ் பட்ஸ் ப்ரோவும் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த இயர்போன் பட்ஸ் வகை மற்ற ஒன்ப்ளஸ் இயர்போன்களை விடவும் விலை கூடுதலாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதீத கருப்பு நிறத்தில் இவை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.
And we're live! Tune in now to watch the unveiling of #OnePlusNord2 🤩
— OnePlus (@oneplus) July 22, 2021
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த நார்ட் போன்களில் இரண்டு சாப்ட்வேர் அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன மேலும் போனின் அடுத்த மூன்று வருடங்களுக்கான சாப்ட்வேர் தொடர்பான உதவிகள் மையமும் இதனுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இரண்டு சிம்கள், ஆக்சிஜன் சாப்ட்வேர் 11.3, 6.43 இன்ச் அமோலெட் டிஸ்பிளே 410ppi பிக்சல் அடர்த்தி உள்ளிட்ட சிறப்புகளுடன் இந்த போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.மேலும் மூன்று கேமிராக்களுடன் கூடிய இந்த போனில் 50 மெகா பிக்சல் IMX766 சென்ஸார்கள் உள்ளன. கூடுதலாக 8 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் சென்ஸார்கள் உள்ளன. கூடுதலாக 32 மெகா பிக்சல் பிரண்ட் கேமிராவும் இதில் உள்ளது.
இந்திய சந்தையில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் வெளியீடு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சியோமி, ஒன்பிளஸ் மற்றும் infinix ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 10 என்ற மாடல் அந்த நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாடல் போனில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி85 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மாடல்களில் வெளியாகவுள்ளது. 48 எம்.பி மெயின் கேமரா மற்றும் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)