இணையத்தில் கசிந்த ONEPLUS 10 Pro வசதிகள் - எவ்வளவு விலை தெரியுமா?
கசிந்த தகவல்களின் அடிப்படையில் ஒன் பிளஸானது அடுத்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான பரிந்துரை பட்டியலில் முதலிடம் வகுக்கும் நிறுவனம்தான் ஒன் பிளஸ் . கடந்த மார்ச் மாதம் தனது ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மொபைல்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன் விலை 40,000 முதல் 70000 என்ற வசதிகளுக்கு ஏற்ற வேறுபாட்டில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 10 மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைபோன்களின் விலை மற்றும் அதன் வசதிகள் இணையத்தில் கசிந்துள்ளது.
You know what....
— Alvin (@sondesix) November 9, 2021
I actually kinda love the rear side of this OnePlus 10 Pro.
Nice to see the company having a very unique design language like that and I'm looking forward to seeing it in other colours. 🤞 https://t.co/LzXXLOmw5G pic.twitter.com/Xuw8jAyG4a
ஒன்பிளஸ் 10 ப்ரோ வசதியை பொருத்தவரையில் 6.7 இன்ச் LTPO Fluid 2 AMOLED திரையுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் அடர்த்தியானது ஒன்பிளஸ் 10 புரோவில் 526 பிபிஐ ஆக கொடுக்கப்பட்டுள்ளது. புதுப்பித்தல் திறன் 120Hz மற்றும் 20:9 aspect ratio வசதியுடன் களமிறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.8GB RAM மற்றும் 128GB உள்ளடங்கு சேமிப்பு திறன் வசதியை ஒன்பிளஸ் 10 புரோ கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.அதே போல 12GB RAM வசதியுடன் 256GB சேமிப்பு திறன் என்ற மற்றொரு வசதியுடனும் ஒன்பிளஸ் 10 அறிமுகமாகவுள்ளது.அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 5,000mAh பேட்டரி ஒன்பிளஸின் அடுத்த மொபைலான ஒன்பிளஸ் 10 புரோவில் அறிமுகமாகும் என தெரிகிறது.ஆண்ட்ராய்ட் 12 இயங்குதள பதிப்பை கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sooo... I'm back from the Future again, this time with the very first and early look at the #OnePlus10Pro in form of stunning 5K renders!
— Steve H.McFly (@OnLeaks) November 9, 2021
On behalf of @ZoutonUS -> https://t.co/OPSs1ray1P pic.twitter.com/A6h1EfT98a
This is the OnePlus 10 Pro with Uniquely Cool looking Camera Design, Coming with Unified OS (OOs x COS) based on Android 12 early Next Year. Awesome.
— TechDroider (@techdroider) November 10, 2021
/Onleaks x Zouton pic.twitter.com/Vkmr9EjTWS
கசிந்த தகவல்களின் அடிப்படையில் ஒன் பிளஸானது அடுத்த வருட தொடக்கத்தில் அமெரிக்கா , கனடா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1, 069 டாலர் மதிப்பீட்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமாணால் தோரயமாக 79,200 ரூபாய்க்கு விற்ப்பனை செய்யப்படலாம்.மேலும் RAM மற்றும் நினைவக திறனின் அடிப்படையில் அதன் விலையில் மாற்றம் ஏற்படலாம்.