Nothing Phone (1) Lite: இது Lite.. விரைவில் அடுத்த மாடலை களமிறக்கும் Nothing?! வெளியான புது தகவல்!
வரப்போகும் புதுமாடல் பாக்கெட் ப்ரண்ட்லியாக அதாவது கையாள எளிதானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய நத்திங் மொபைல் தன்னுடைய அடுத்த மாடல் செல்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Nothing Phone (1) Lite
ஐபோனை அடித்துத்தூக்கிறேன் என சந்தையில் களமிறங்கியது நத்திங் போன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Nothing Phone (1) சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது. கடுமையான எதிர்பார்ப்புடன் களமிறங்கிய Nothing Phone (1) பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
தனி சார்ஜர் இல்லை. அதற்காக தனி தொகை செலுத்திதான் வாங்க வேண்டும், இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும் 15W சார்ஜிங்கிற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, நத்திங் ஃபோன் பாக்ஸி வடிவமைப்பு, தட்டையான விளிம்புகள் மற்றும் சற்று அகலமான திரையால் பயன்படுத்த சற்று கடினம் என ஃபீல் பண்ண வைத்தது, கைரேகை சென்சாரில் சொதப்பியது என நத்திங் போனுக்கு பல பிரச்னைகள் சொல்லப்பட்டன. ஆனால் பல்வேறு வாடிக்கையாளர்கள் நத்திங் போனுக்கு உரிமையாளரானார்கள். இந்நிலையில்தான் நத்திங் போன் தன்னுடைய அடுத்த மாடலான Nothing Phone (1) Liteஐ வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரப்போகும் புதுமாடல் பாக்கெட் ப்ரண்ட்லியாக அதாவது கையாள எளிதானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் பின்புறம் 900 LEDs இருக்கலாம் என்றும், 6.55இன்ச் டிஸ்பிலே, Qualcomm Snapdragon 778G+ சிப், 50மெகாபிக்ஸல் கொண்ட இரு கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெறலாம் என கணிக்கப்படுகிறது. விலையும் ரூ.25ஆயிரத்துக்குள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன்..
நத்திங் போன் நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பெய். நோக்கியாவில் வேலை பார்த்த இவர் பின்னர் நண்பர் ஒருவருடன் இணைந்து தொடங்கிய செல்போன் நிறுவனம்தான் ஒன் ப்ளஸ். சந்தையில் ஒன் ப்ளஸ் சக்கைப்போடு போட இவரும் ஒரு காரணம். பல்வேறு காரணங்களால் ஒன் ப்ளஸ் நிறுவனத்தில் இருந்து விலகி தனியாக ஒரு பிராண்டை தொடங்கினார் கார்ல். மக்களுக்கும் டெக்னாலஜிக்கும் இடையே உள்ள தடையை உடைக்க வேண்டுமென்றும், தடை என்பதே நத்திங் எனவும் தெரிவித்தார். இதனை தீமாகக் கொண்டே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுபோக, தான் எதுவுமே இல்லாமல் நிறுவனம் தொடங்கியதால் நிறுவனத்துக்கு நத்திங் கார்ல் பெயரிட்டதாகவும் கூறப்பட்டது.