Nokia XR20 | 47 ஆயிரம் ரூபாய் விலை.. நீண்ட நேரம் செயல்படும் பேட்டரி.. எப்படி இருக்கிறது நோக்கியா XR20?
நோக்கியா XR20 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் 46,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா XR20 மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை சுமார் 46,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6 GB RAM எனவும், 128 GB Storage எனவும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் Ultra Blue, Granite ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
நோக்கியா XR20 மாடல் iPhone 13 Pro Max மாடலின் எடையைப் போலவே இருக்கிறது. எனினும் பிற ஸ்மார்ட்ஃபோன்களுடன் ஒப்பிடுகையில் இதன் எடை அதிகம். `நீண்ட நேர உழைப்பிற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது’ என விளம்பரப்படுத்தப்படும் இந்த மாடல், அதற்கேற்ப செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நோக்கியா XR20 மாடல் சுமார் 6.67 இன்ச் full-HD+ LCD பேனலைக் கொண்டுள்ளது. இந்த மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும், இதன் கீழ்ப்பகுதியில் 3.5 மில்லிமீட்டர் ஹெட்ஃபோன் ஜாக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்க்ரீன் திரைப்படங்கள் பார்ப்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் சிறந்தது எனக் கருதப்படுகிறது.
இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோனில் Qualcomm Snapdragon 480 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள dual slim ட்ரே மூலமாக 512GB வரை மெமரி கார்ட் சேர்க்க முடியும். இது இரண்டு சிம்களிலும் 5G ஆப்ஷனை அளிக்கிறது. Wi-Fi ac/ax, Bluetooth 5.1, NFC, வழக்கமான நேவிகேஷன் வசதிகள் ஆகியவை இதிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
நோக்கியா XR20 மாடலில் 4630mAh பேட்டரியும், இந்த மாடலின் பெட்டியில் 18W சார்ஜர் கொடுக்கப்படுகிறது. மேலும் இதில் 15W வயர்லெஸ் சார்ஜிங் வேலை செய்கிறது. நோக்கியா XR20 மாடல் `ஆண்ட்ராய்ட் 11’ ஆபரேடிங் சிஸ்டம் மூலமாக செயல்படுகிறது.
சுமார் 47 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த மாடல், இதே விலைக்கு நிகரான பிற மாடல்களான Realme GT (ரூ. 37,999 முதல்), OnePlus 9R (ரூ. 39,999 முதல்) ஆகியவற்றைவிட பல்வேறு புதிய சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதோடு, அவற்றைவிட வேகமாகவும் செயல்படுகிறது. இந்த பட்ஜெட்டிற்குள் வெளிவரும் பிற மாடல்களை விட நோக்கியா XR20 மாடல் பெரிதும் விரும்பி வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா XR20 மாடலில் dual camera பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் முன்னணி கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா சேர்க்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்காக 8 மெகாபிக்சல் கேமரா பயன்படுத்தப்படுகிறது. நோக்கியா மாடல்களுக்கே உரிய கேமரா தரம் இதில் இடம்பெற்றிருந்தாலும், இதே விலைக்குக் கிடைக்கும் பிற மாடல்களில் இதனைவிட மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் அளிக்கப்படுகின்றன.
ஸ்மார்ட்ஃபோனை அடிக்கடி கீழே போடுபவர்கள், வெளிப்புறங்களில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு நோக்கியா XR20 மாடல் சிறப்பாகப் பயன்படும். இதன் வெளிப்புற உருவாக்கம் இந்தக் காரணங்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளதால், நீண்ட காலம் இந்த மாடலைப் பயன்படுத்த முடியும்.