WhatsApp Features: பில்ட் இன் Dial Pad, ஸ்டிக்கர், ஃபில்டர் அம்சங்கள் - வாட்ஸப்பின் புதிய அப்டேட்கள்!
WhatsApp Features: வாட்ஸப்பில் வெளியாகியுள்ள அப்டேட்களை பற்றிய தொகுப்பு இது.

வாட்ஸ் அப் பயனர்களுக்கு மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கியுள்ளது. 2025- ஜனவரியில் மட்டும் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் வழங்கியுள்ளது. ஏ.ஐ. ஸ்டூடியோ, a built-in Dial Pad ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்டா வாட்ஸ் அப் - புதிய அப்டேட்கள்:
வாட்ஸப்பில் பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. மெசேஜ், வாய்ஸ் கால், பணி தொடர்பான விசயங்கள், வீடியோ ஷேரிங், புகைப்படம், ஃபைல்கள் ஷேர் செய்வதற்கு மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ கால் வசதிகளில் ஃபில்டர்கள், அதிக MB ஃபைல்களை பகிர்வது, வீடியோ காலில் அதிக நபர்கள் இணையலாம் ஆகிய பல அப்டேட்களை மெட்டா வழங்கியது. நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் சமீபத்தில் அப்டேட் செய்யவில்லை என்றால் அப்டேட் செய்துவிடுங்க.
வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸப் மற்ற ஆப்களின் தேவை இல்லாத அளவுக்கு அப்டேட்களை வழங்கி வருகிறது. யு.பி.ஐ. மூலம் பணபரிப்பாற்றம், பிசினஸ் செய்பவர்களுக்கு உதவும் வகையில், நோட்ஸ், ரிமைண்டர் ஆகிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இன்னும் பல வசதிகளை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது.
ஃபோட்டோ ஸ்டிக்கர்ஸ்:
மெசேஜிங் பயன்பாட்டிற்காக, தகவல் பரிமாற்றம் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட வாட்ஸ் அப். இப்போது வாட்ஸ் அப் இல்லாமல் ஒரு நாளும் இல்லை என்றாகிவிட்டது. வீட்டில் பக்கத்து அறையில் இருப்பவர்கள் முதல் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுடன் நிகழ் நேரத்தில் உரையாட முடியும். தனிநபர், குழு உரையாடல் சுவாரஸ்யப்படுத்த ஃபோட்டோக்களை ஸ்டிக்கராக மாற்றும் வசதி வாட்ஸப்பில் கிடைக்கிறது.
ஃபோட்டோ, வீடியோ ஃபில்டர்:
வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதி கிடைக்கிறது. வாட்ஸ் அப் வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன் Background மாற்றிகொள்ள முடியும். அதேபோல வாட்ஸ் அப்பிலும் கிடைக்கிறது. வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில் “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
AI ஸ்டூடியோ:
உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ளது வாட்ஸ் அப். வாட்சப்பில் ”personalised AI characters” உருவாக்கும் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. ’Artificial Intelligence (AI)’ வசதியை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் கிடைக்கும் மெட்டா AI மூலம் க்ரியேடிவாக இருக்கலாம்.
Built-in Dial Pad வசதி:
வாட்ஸ் அப் ஆடியோ, வீடியோ கால் பயன்படுத்துவம் அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் எண்ணை Contant லிஸ்டில் 'Save' செய்யாமலேயே தொடர்பு எண்ணை பயன்படுத்தி கால் செய்ய முடியும். இதன் மூலம் ஒருமுறை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை உங்க கான்டெடக்ட்டில் Save செய்ய வேண்டியதில்லை. தொழில் ரீதியிலாக, ஏதேனும் தகவல் தேவைப்படும் சமயங்களில் அழைப்புகளை மேற்கொள்ள இந்த வசதி உதவும்.
ரியாக்ட்:
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் Quick ரியாக்ட் வசதி இருப்பதுபோல.. ‘Double Tap to React’ வசதி வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் சாட்டில் இரண்டு முறை Tap செய்தால் லைக் செய்ய முடியும். இதே வசதி வாட்ஸ் அப்பில் கிடைக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

