டெடி என்ற சொல் 1902-ல் அமெரிக்காவின் 26வது ஜனாதிபதி தியோடர் டெடி ரோஸ்வெல்ட் இரக்கத்தன்மையின் காரணமாக ஒரு கரடி குட்டியை வேட்டையாடாமல் சென்றபோது உருவானது.
இந்த நிகழ்வுகள் செய்தித்தாள்களில் பிரபலமாக பேசப்பட்டது. பிறகு மோரிஸ் மிக்டாம் எனும் பொம்மை கடைக்காரர் ஒரு கரடி பொம்மையை செய்து அதற்கு டெடி என்று பெயரிட்டார்.
விரைவில் அது காதல், பாதுகாப்பு, ஆறுதல், குழந்தைப்பருவத்தின் அப்பாவித்தனம் போன்றவற்றின் அடையாளமாக மாறியது.
காதல் வாரத்தில் பிப்ரவரி 10, டெடி டே-வாக கொண்டாடப்படுகிறது.
இன்று டெடி பொம்மையை பரிசளிப்பது உங்கள் காதலருக்கு நீங்கள் அளிக்கும் உறுதி, உங்கள் காதல் மற்றும் தோழமையை அடையாளப்படுத்தும்.
மேலும் அவர்கள் தனிமையாக உணரும்போது, நீங்கள் இருக்கிறீர்கள் என்று கூறுவதாக அர்த்தம்.
உலகில் அதிகப்படியான மக்கள் வார்த்தைகளில் ஆறுதலையும் அன்பையும் தேடும்போது, டெடி தினமான இன்று உங்கள் காதலருக்கு டெடி பொம்மையை கொடுத்து, அவர்கள்மீதான காதலை வெளிப்படுத்துங்கள்.