Netflix Subscriber Loss: கறார் காட்டும் நெட்ஃபிளிக்ஸ்! அதிர்ச்சிக்குள்ளான சந்தாதாரர்கள்! இனி இதுக்கெல்லாம் நோ!
Netflix Subscriber Loss: இந்தாண்டின் முதல் காலாண்டில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதால், வரும் காலத்தில் நெட்ஃபிளிக்ஸில் விளம்பரங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
பிரபல ஓ.டி.டி. ஒளிப்பரப்பு தளமான நெட்ஃபிலிக்ஸ்(Netflix) அடுத்த இரண்டு ஆண்டுகளில் விளம்பரங்கள் வழங்குவதை அறிமுகப்படுத்த இருக்கிறது.
உலக அளவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து,இத்தனை ஆண்டுகள் நடைமுறைப்படுத்தி வந்த வழக்கங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தற்போது நெட்ஃபிளிக்ஸ் அப் விளம்பரங்கள் இல்லாமல் திரைபடங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை வழங்கிவருகிறது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விளம்பரங்கள் உடன் கன்டண்ட்களை வழங்க இருக்கிறது. குறிப்பாக, நெட்ஃபிளிக்ஸில் பிரபலம் வாய்ந்த சிறப்பு அம்சமான பாஸ்வேர்டு பகிர்தல் என்ற வசதியையும் குறைக்க உள்ளது. அதாவது, தற்போது ஒருவரிடம் நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் இருந்தால், அவருடைய அக்கவுண்டை, மற்ற டிவைஸ்களில், யூசர் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து பயன்படுத்தலாம். தற்போது, வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்த, இந்த பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சனில் மாற்றம் செய்ய இருப்பதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ்(Reed Hastings) கூறுகையில், இவ்வளவு காலமாக நெட்ஃபிளிக்ஸில் விளம்பங்கள் கிடையாது; பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சன் இருந்தது; இவைகளை பயனாளர்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், இனிவரும் காலத்தில் நெட்ஃபிளிக்ஸில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலண்டில் மேலும், 2 மில்லியன் வாடிக்கையாளர்களை இழக்கும் என கணித்துள்ளது.
ஆண்டிற்கு 25 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களை பெறும் நிறுவனம், வரலாறு காணாத அளவிற்கு வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவலினால் ஏற்பட்ட ஊரடங்கு நாட்களில், ஓ.டி.டி.க்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அப்படி, நெட்ஃபிளிக்ஸ் ஊரடங்கு காலத்தில் அதிக பயனர்களை ஈர்த்தது. ஆனால், இன்னும் கொரோனாவிற்கு முந்தையா காலத்தில் இருந்த அளவுக்கு நெட்ஃபிளிக்ஸிம் வளர்ச்சி இல்லை என்று சொல்லப்படுகிறது.
காரணம் என்ன?
பாஸ்வேர்டு பகிர்வு ஆப்சன், வளர்ந்து வரும் போட்டி உள்ளிட்ட நான்கு காரணங்களை இதற்கு நிர்வாகம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள், 221.6 மில்லியன் சந்தாதாரர்களுக்கு மேல், அதன் சேவையைப் பயன்படுத்துவதாகவும், அதற்கு பணம் செலுத்துவதில்லை என்றும் கூறியுள்ளது. லாஸ் கேடோஸ், கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட நிறுவனம், அந்த பார்வையாளர்களை தனி அக்கவுண்டின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்தவைக்கும் வழிகளை பரிசோதித்து வருகிறது. அதாவது, வேறொருவரின் கணக்கைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களிடம் அதிக பணம் செலுத்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
நெட்ஃபிளிக் நிறுவனத்தின் போட்டியாளர்களான மற்ற வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் அனைவரும் விளம்பர ஆதரவு சேவைகளை வழங்குகிறார்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் நெட்ஃபிக்ஸ் பல ஆண்டுகளாக விளம்பரங்களை வழங்கும் என்று ஊகித்திருந்தன. ஆனால், வெகு காலமாக இந்த நடைமுறைக்கு இணை நிறுவனர் ஹேஸ்டிங் அனுமதி அளிக்கவில்லை.
நெட்ஃபிக்ஸ் உலக அளவில் உள்ள மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய, புதிய வாடிக்கையாளர்களை சிறந்த திட்டங்களுடன் கவர்ந்திழுப்பதன் மூலமும், சில வழக்கங்களை மாற்றியமைத்தன் மூலமும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேற முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்கள், டி.வி. ஷோக்களுக்காக செலவிடும் தொகையும் குறைக்க இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்