SIM Card: : ஒரே அடையாளத்தில் பல சிம்கார்டு இருந்தால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்: தெரிந்து கொள்வது எப்படி?
Multiple SIM Under Your Name: உங்களது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன, அதை எப்படி நீக்கம் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
உங்களது பெயரில் உள்ள சிம் கார்டை வைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என புதிய விதிகள் தெரிவிக்கின்றன.
உங்களது பெயரில் பல சிம் கார்டுகளை எடுப்பது சிக்கலை ஏற்படுத்தலாம். தொலைத்தொடர்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான சிம் கார்டுகளை நீங்கள் எடுத்திருந்தால், நீங்கள் பெரும் அபராத தொகையை செலுத்த வேண்டியிருக்கும். மேலும், விதிகளை மீண்டும் மீறினால் நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கின்றன.
எத்தனை சிம் கார்டு வைத்துக் கொள்ளலாம்?
ஒரு நபர் அதிகபட்சமாக வைத்துக் கொள்ளும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையானது, எங்கு இருப்பிடத்தை பொறுத்து இருக்கும். ஒரு நபர் 9 சிம் கார்டுகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் "ஜம்மு & காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு உரிமம் பெற்ற சேவைப் பகுதிகள் உள்ளடக்கிய நபர்கள் அதிகபட்ச சிம் கார்டுகளின் வரம்பானது 6 ஆக உள்ளது என தொலைத்தொடர்பு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மேலும், உங்களால், வரையறுக்கப்பட்ட சிம் கார்டுகளின் எண்ணிக்கையை விட, அதாவது நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் பட்சத்தில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் வழங்கப்படாது. நீங்கள் சிம் கார்டுக்கு பரிசீலனை செய்தாலும் , தொலைத்தொடர்பு நிறுவனங்களால் கண்டறியப்பட்டு நிராகரிக்கப்படும்.
அபராதம்:
உங்களது பெயரில் 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருந்தால், அபராதம் குறித்தும், தண்டனை குறித்தும் விதிகள் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், உங்களது பெயரில் சிம் கார்டுகளை வைத்து குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் ரூ. 50, 000 முதல் ரூ. லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தொலைத்தொடர்பு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் , சில சமயங்களில், குற்றங்களை பொறுத்து சிறைத் தண்டனை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 9 சிம் கார்டுகளுக்கு மேல் வேண்டும் என நினைப்பவர்கள் உங்களுக்கு தெரியாமலே, உங்களது பெயரில் மற்றொருவர் சிம் கார்டு எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கூட , உங்களுக்கு மிகப் பெரிய சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஆகையால், உங்களது பெயரில் உள்ள சிம் கார்டுகளை தெரிந்து கொள்வது மிக முக்கியமாகும் .
எப்படி தெரிந்து கொள்வது.
உங்களது அடையாளத்தில், மற்றொருவர் சிம் கார்டுகளை எடுத்து , பல குற்றங்களை செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், உங்களது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்ப்போம் .
அதற்கு, TAFCOP (sancharsaathi.gov.in) என்ற வலைதளத்திற்கு செல்லவும். அதில் , உங்களது தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
மேலும், ஓடிபி எண் , உங்களுக்கு வரும், அதையும் சமர்பிக்கவும்.
இதையடுத்து, பல பெயர்கள் காண்பித்தால், உடனடியாக அருகில் உள்ள, உங்களது தொலைத்தொடர்பு சேவை மையத்திற்குச் சென்று, உடனடியாக மற்ற பெயர்களை நீக்கவும்.
Also Read: WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?