WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
WhatsApp Meta AI 3D Image: வாட்சப் செயலியில் புதிதாக உருவாக்கப்பட்ட மெட்டா மூலம், முப்பரிமாண புகைப்படங்களை சில நொடிகளில் உருவாக்கி கொள்ளலாம்.
நீங்கள் ஒரு சில நொடிகளில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வகையில் வாட்சப் மெட்டா AI, சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
வாட்சப்:
உலகளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்சப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமாக மெட்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மார்க் சுக்கர்பெர்க் செயல்பட்டு வருகிறார்.
வாட்சப் அவ்வப்போது, அதன் பயன்பாடுகளில் பல்வேறு அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. வாட்சப் செயலியானது, முதன்மை நோக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பயன்படுகிறது. மேலும் வாட்சப் கால் மற்றும் வாட்சப் வீடியோ கால் செய்வதற்கும் பயன்படுகிறது. இதையடுத்து, வாட்சப் மூலமாக பணம் அனுப்பும் வகையிலான வசதிகளும் கொண்டுவரப்பட்டன.
Meta AI:
இந்நிலையில், தற்போது மெட்டா AI , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடும் வந்துள்ளது. இந்த மெட்டா AI மூலம் , நீங்கள் பல்வேறு வகையான கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஏதேனும் உங்களுக்கு கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் என்றால், வாட்சப் செயலிக்குச் செல்லுங்கள், அதில் உங்கள் கேள்விகளை டைப் செய்யுங்கள். உடனே , உங்களுக்கு பதில் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, உங்களுக்கு முப்பரிமாண படங்கள் தேவைப்படுகிறதா, அதையும் வழங்க தயாராக இருக்கிறது மெட்டா AI.
எப்படி தெரியுமா?
மிக எளிமையாக, அதுவும் மிக விரைவாக 3டி புகைப்படங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- அதற்கு முதலில், உங்களது வாட்சப்-இல் உள்ள Meta AI என்ற சேட் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
- அதில் உங்களுக்கு வேண்டிய 3டி புகைப்படங்களை டைப் செய்யுங்கள்.
- உதாரணத்திற்கு create 3d lion image என்று டைப் செய்யுங்கள்.
- இதையடுத்து, உங்களுக்கு முப்பரிமாண சிங்கத்தின் புகைப்படம் வந்துவிடும்.
இதுபோன்று, எளிமையாக கிடைக்கக்கூடிய பயன்பாடுகளை பார்த்து, உபயோகித்து பயன்பெறுங்கள்
Also Read: Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!