(Source: ECI/ABP News/ABP Majha)
Motorola Edge 30: இந்தியாவில் வெளியானது மோட்டோரோலா எட்ஜ் 30.. சிறப்பு என்ன? விவரங்கள் இதோ.!
இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் எட்ஜ் 30 மாடல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ என்ற மாடலை விட தற்போதைய மாடல் விலை குறைந்தது.
இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய எட்ஜ் 30 மாடல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ப்ரோ என்ற மாடலை விட தற்போதைய மாடல் விலை குறைந்தது எனக் கூறப்பட்டுள்ளது. முந்தைய மாடல் Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலமாக இயங்கிய நிலையில், தற்போது மோட்டோரோலா எட்ஜ் 30 இந்தியாவிலேயே முதல்முறையாக Qualcomm Snapdragon 778G+ 5G சிப்செட் மூலமாக இயங்கும் ஸ்மார்ட்ஃபோனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 30 குறித்த விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.
மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலில் 6.5 இன்ச் உயரம் கொண்ட ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. இது FHD+ pOLED பேனல் கொண்டிருப்பதோடு, 10 பிட் கலர் சப்போர்டும், 144Hz refresh rate அம்சமும் கொண்டது. மேலும் இந்த ஸ்க்ரீன் HDR10+, DCI-P3 கலர் ஸ்பேஸ் ஆகியவையும் கூடுதல் சிறப்பம்சங்களாக உள்ளன. இந்த ஸ்க்ரீனில் கொரில்லா க்ளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது.
Snapdragon 778G+ சிப்செட் கொண்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்ஃபோன் 6GB அல்லது 8GB LPDDR5 RAM மாடல்களாகவும், 128GB ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்று கேமராக்களைப் பின்பக்கத்தில் கொண்டுள்ள இந்த மாடலில், 50MP முன்னணி கேமரா, 50MP அல்ட்ராவைட் கேமரா ஆகியவற்றோடு 2MP டெப்த் சென்சார் கேமராவும் உண்டு. 50MP கேமரா சென்சார்கள் இரண்டுமே சுமார் 30fps வரையிலான 4k வீடியோக்களைப் பதிவு செய்ய உதவுகின்றன. கூடுதலாக செல்ஃபி, வீடியோ கால்கள் ஆகியவற்றிற்காக முன்பக்கத்தில் 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற சிறப்பம்சங்களாக மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்ஃபோன் மாடலில் இரட்டை மைக்ரோஃபோன்கள், ஸ்டீடியோ ஸ்பீக்கர்கள், NFC, டிஸ்ப்ளேவுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 4020mAh ஆற்றல் கொண்ட பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தற்போது மோட்டோரோலா எட்ஜ் 30 மாடலின் 6GB/128GB வேரியண்ட் ஸ்மார்ட்ஃபோன் விலை 27,999 ரூபாய் எனவும், 8GB/128GB வேரியண்ட் விலை 29,999 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Meteor Grey, Aurora Green ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்ஃபோன் மாடல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் மே 19 அன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் மோட்டோரோலா எட்ஜ் 30 மாடல் ஸ்மார்ட்ஃபோனை ஃப்லிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் முதலான தளங்களில் வாங்குவோருக்குத் தங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்ட், ஈஎம்ஐ பரிவர்த்தனை முதலானவற்றில் சுமார் 2 ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.