WhatsApp: அச்சச்சோ.! இந்த போன்களில் வாட்சப் இயங்காது: அதற்கு, என்ன செய்ய வேண்டும்?
WhatsApp - Apple: வாட்சப் செயலியானது, ஐபோன் பயனாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐபோன் மென்பொருளில் அப்டேட் தொடர்பாக வாட்சப் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அறிவிப்பில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது? எந்த ஐபோன்களில் வாட்சப் செயல்படாது? என்பது குறித்து தெரிந்து கொள்ளவோம்.
வாட்சப் அறிவிப்பு:
புதிய அம்சங்கள், மேம்பாட்டை ஏற்படுத்த மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இயங்குதளத்தை மேம்படுத்துவதற்கு , வாட்சப் புதிய முறையை கொண்டு வரவுள்ளது.
அதாவது பழைய ( OS ) இயக்க முறைமைகளுக்கான ஆதரவை, WhatsApp கைவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்சப், அதன் சமீபத்திய அப்டேட்டில், சமூக பழைய iOS பதிப்புகளுக்கான ஆதரவைக் கைவிடுவது குறித்து பயனர்களுக்கு அறிவிப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பழைய iOS iPhone பயனர்கள், இனி WhatsApp ஐப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Redmi A4: அடடே!. ரூ.10,000க்குள் 5ஜி மொபைல்: இன்று விற்பனைக்கு வந்த ரெட்மீ ஏ4-5G: சிறப்பம்சங்கள் இதோ.!
யார் பயன்படுத்த முடியாது?
புதிய அறிவிப்பில், iOS 15 OS க்கு முன் உள்ள மொபைல்களில் வழங்கி வந்த ஆதரவை நிறுத்தப்போவதாக WhatsApp தெரிவித்துள்ளது., அதாவது iOS 15 அல்லது அதற்கு முன்னர் இயங்கும் iPhone-களுக்கான ஆதரவை நிறுத்தப் போவதாக WhatsApp தெரிவித்துள்ளது.
தற்போது, WhatsApp செயல்பாடானது iOS 12 அல்லது அதற்குப் பிறகு உள்ள iOSகளில் பயன்படுத்த முடியும்,
இந்நிலையில், புது அறிவிப்பின் மூலம், வரும் மே மாதம் 5 ஆம் தேதி முதல், iOS 15.1 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் சாதனங்களை மட்டுமே, வாட்சப் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அப்டேட் செய்யுங்கள்:
எனவே, ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களை சமீபத்திய iOS புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதாரணத்திற்உ, உங்கள் சாதனம் iOS 15.1 புதுப்பித்தலுடன் இணக்கமாக இருந்தால் மற்றும் நீங்கள் இன்னும் iOS 15 இல் இயங்கிக் கொண்டிருந்தால், உங்கள் சாதனத்தை சமீபத்திய iOSக்கு புதுப்பிப்புக்கவும்
உங்கள் ஐபோன் அதன் மென்பொருள் அப்டேட்டை நிறைவடைந்து விட்டாலோ அல்லது iOS 15.1 க்கு அப்டேட் செய்ய முடியவில்லை என்றாலோ, வேறு வழியில்லை வாட்சப் இயங்காது அல்லது புதிய iPhone க்குதான் நீங்கள் மாறியாக வேண்டும்.