மேலும் அறிய
Redmi A4: அடடே!. ரூ.10,000க்குள் 5ஜி மொபைல்: இன்று விற்பனைக்கு வந்த ரெட்மீ ஏ4-5G: சிறப்பம்சங்கள் இதோ.!
Redmi A4 5G: ரெட்மீ ஏ4 மொபைலானது, இரண்டு வண்ணங்களில் ரூ. 8,499 விலையில் தொடங்கி விற்பனைக்கு வந்துள்ளது.

Redmi A4
Source : MI
இன்று, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தில் குறைந்த விலை மதிப்பில் கிடைக்கும் மொபைல்களில் ஒன்றாக, Redmi A4 மொபைலை Xiomi அறிமுகப்படுத்தியுள்ளது.
எங்கு வாங்கலாம்.?
இன்று விற்பனைக்கு வந்துள்ள மொபைலை, அமேசான், MI ஆகிய ஆன்லைன் தளங்களிலும், நேரடியாக MI வர்த்தக கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறப்பமசங்கள்:
- Redmi A4 5G ஆனது HD+ தெளிவு திறனுடன் கூடிய 6.88 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது
- ஸ்கிரீன் ரெஃப்ரஷ் ரேட்: 120 HZ
- ப்ராசசர்: ஸ்னாப்டிராகன் 4s Gen 2 5G
- 18W வயர்டு சார்ஜிங்
- பேட்டரி 5,160 mAh
- Redmi A4 5G மொபைலானது 4GB ரேம் /6GB ரேம் இணைப்புடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
- ரூ. 1999 மதிப்புள்ள 33W சார்ஜர் இலவச இணைப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- ரெட்மி ஏ4 ஆனது தட்டையான விளிம்புகள், வட்டமான மூலைகள் மற்றும் பின்புறத்தில் ஒரு வட்ட கேமரா
தொகுதியுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது, - Starry Black மற்றும் Sparkle Purple ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
இது 4GB + 64GB மற்றும் 4GB + 128GB ஆகிய இரண்டு சேமிப்பக விருப்பங்களில் வரும், இதன் விலை ரூ. 8499 மற்றும் ரூ.9499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தொழில்நுட்ப செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் தொழில்நுட்பம் செய்திகளைத் (Tamil Technology News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement