Realme P2 Pro:வெளியான ரியல்மி புதிய மாடல் ஸ்மாட்ஃபோன் - என்னென்ன சிறப்பு இருக்கு?
Realme P2 Pro: ரியல்மி P2 Pro மாடல் பற்றிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
ரியல்மி P2 Pro மாடல் புதிய டிசைக், தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. பேட்டரி, ஸ்டோரேஸ், கேமரா உள்ளிட்டவற்றில் என்ன சிறப்பம்சம் என்பதை பற்றி காணலாம்.
டிஸ்ப்ளே மற்றும் டிசைன்:
ரியல்மி நிறுவனம் தனது ப்ராடக்களின் டிசைன் க்ளாசிக்காக இருக்கும்படி பார்த்துக்கொள்வது வழக்கம். ஹெக்சகனல் டீடெய்ல் உடன், 180 கிராம் எடை கொண்ட ஃபோன். ஸ்மார்ஃபோன் கர்வி எட்ஜ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.7-inch AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh rate மற்றும் FHD ரெசொல்யூசன் உடன் 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ரெயின்வாட்டர் ஸ்மாட் டச் உடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மழை நேரத்திலும் டச் ரெஸ்பான்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா அம்சங்கள்:
ரியல்மி P2 Pro 50MP Sony LYT-600 சென்சார், 8MP அல்ட்ராவைட் லென்ஸ், ரியல்மியின் ஹைபரிமேஜ் ஏ.ஐ. ஃபோட்டோகிராபி உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. ஃபோட்டோ தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாடலில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் Snapdragon 7s Gen 2 processor உடன் வீடியோ கேமிஸ், மல்டி டாஸ்கின் உள்ளிட்டவற்றை சிறப்புடன் செய்ய ஏதுவான மென்பொருள் கொடுகக்ப்பட்டுள்ளது. 12GB of RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. Android 14, 5,200mAh பேட்டரி, 80 வாட் சார்ஜிங் வசதி உண்டு. இதனால் 20% இல் இருந்து பேட்டரி 100% 36 நிமிடங்களில் எட்டிவிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ஊ.21,999. ஸ்டோரேஷ் ஸ்பேஸ் ஏற்ப விலை மாரும்.