மேலும் அறிய

Poco M5: பட்ஜெட் போன்களுக்கு சவால் விட வந்துவிட்டது போகோ எம்5… இந்த விலையில் இத்தனை வசதிகளா!

4ஜிபி வேரியண்ட் ரூ.12,499 மற்றும் 6ஜிபி வேரியண்ட் ரூ.14,499-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இருந்து அறிமுக சலுகை விலையாக சில மாற்றங்கள் வரலாம் என்றும் தெரிகிறது.

இந்தியாவில் அறிமுகம் ஆனது போகோ எம்5. இந்த சாதனம் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.12499 எனவும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.14,499 எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

போகோ எம்5

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களை உற்பத்தி செய்து வருகின்ற சியோமி நிறுவனம் இதன் பிராண்டான போக்கோவை கடந்த 2018 வாக்கில் அறிமுகம் செய்தது. அறிமுகமான முதல் போனிலேயே குறைந்த விலையில் நிறைந்த ஸ்பெசிபிகேஷன்ஸை அள்ளி கொடுத்து மக்கள் மத்தியில் ரீச் ஆனது மட்டுமின்றி, பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விருதுகளை அள்ளி குவித்தது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோவுடன் இயங்கி வருகிறது. மொத்தம் நான்கு சீரிஸ்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. இதில் M சீரிஸ் வரிசையில்தான் இப்போது இந்திய சந்தையில் M5 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Poco M5: பட்ஜெட் போன்களுக்கு சவால் விட வந்துவிட்டது போகோ எம்5… இந்த விலையில் இத்தனை வசதிகளா!

பிராசசர்

இதன் டிஸ்ப்ளேவை பொறுத்த வரை, 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி கொடுத்துள்ளார்கள். மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஸ்நாப்டிராகன் இல்லாதது இந்த மொபைலில் உள்ள ஒரே குறை. ஆனால் தற்போது இந்த ரேஞ்சில் வரும் எந்த மொபைல் ஸ்நாப்டிராகன் கொடுப்பதில்லை என்பதால் அதுவும் விற்பனையை பாதிக்காது.

தொடர்புடைய செய்திகள்: AK 63 லேட்டஸ்ட் அப்டேட்... ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி... இதுவும் 'வி'யில் துவங்கி 'எம்'இல் முடியும் டைட்டில்தான்!

கேமரா

இந்த மொபைலில் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது. மற்ற இரண்டில் ஒன்று வைட் கேமராவாகவும், ஒன்று மேக்ரோவாகவும் வழக்கம்போல் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Poco M5: பட்ஜெட் போன்களுக்கு சவால் விட வந்துவிட்டது போகோ எம்5… இந்த விலையில் இத்தனை வசதிகளா!

ஸ்பெசிபிகேஷன்ஸ்

5000mAh பேட்டரி பவர் இந்த மொபைலுக்கு மற்றொரு ப்ளஸ் பாய்ண்டாக உள்ளது. 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருவதால் இந்த மொபைல் பல பட்ஜெட் ரெஞ்ச் மொபைல்களை தூக்கி சாப்பிடும் என்கிறார்கள் நிபுணர்கள். இதில் தற்போது 4ஜி இணைப்பு வசதி மட்டுமே இடம் பெற்றுள்ளது. 5ஜி வெர்ஷன் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி + 128ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி வேரியண்ட் ரூ.12,499 மற்றும் 6ஜிபி வேரியண்ட் ரூ.14,499-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இருந்து அறிமுக சலுகை விலையாக சில மாற்றங்கள் வரலாம் என்றும் தெரிகிறது. மொத்தம் மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த மொபைல் வரும் 13-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget