OnePlus 13 Series: புதிய அப்டேட்களுடன் வெளியாகும் ஒன் ப்ளஸ் 13 சீரிஸ் - சிறப்புகள் என்ன?
OnePlus 13 Series: ஒன் ப்ளஸ் 13 சீரிஸ் பற்றிய விவரங்களை இங்கே காணாலம்.
ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மாட்ஃபோன் OnePlus 13 மற்றும் OnePlus 13R வெளியாக இருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை காணலாம்.
ஸ்மாட்ஃபோன் சந்தையில் பிரபலமான ஒன் ப்ளஸ் 13-வது சீரிஸ் ஜன.7-ம் தேதி வெளியாக இருக்கிறது. பல புதிய அப்டேட்கள், தொழில்நுட்ப அம்சங்கள் புதிய மாடலில் வழங்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ள்ளது.
வடிவமைப்பு:
ஒன் ப்ளஸ் 13 மற்றும் ஒன் ப்ளஸ் 13R இரண்டுமே கர்வ் டிஸ்ப்ளே கொண்டதுதான். இரண்டிலும் வட்ட வடிவ கேமரா டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்களில் வீகன் லெதர், க்ளாஸ் என இரண்டு வகையான ஃபோன் கேஎஸ் உடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 and IP69 அளவு டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டது. இது ஒன் ப்ளஸ் 13R மாடலில் கிடைக்காது.
தொழில்நுட்ப சிறப்புகள் என்னென்ன?
ஒன் ப்ளஸ் 13 சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களில் 6,000mAh பேட்டரி, அதிக விரைவு சார்ஜிங், புதிய சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளது. oன் ப்ளஸ் 13 Snapdragon 8 Elite chipset, ஒன் ப்ளஸ் 13R Qualcomm’s Snapdragon 8 Gen 3 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் OxygenOS 15 ஒ.எஸ். கொண்டுள்ளது. இரண்டிற்கும் 3-4 ஆண்டுகள் சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா சிறப்புகள்:
ஒன் ப்ளஸ் 13 50MP Sony LYT-808 ப்ரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ராவைட் சென்சார் கொண்டுள்ளது. OnePlus 13R மூன்று கேமராவுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. 50MP ப்ரைமரி கேமரா, டெலிஃபோட்டீ லென்ஸ், 8MP அல்ட்ராவைட் லென்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை விவரம்:
ஒன் ப்ளஸ் 13 மாடல் ரூ.70,000 வரையிலும் ஒன் ப்ளஸ் 13R ரூ. 50,000 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாசிக்க..