(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp : அழிந்துபோன வாட்ஸ் அப் மெசேஜ்களை மீட்க வேண்டுமா? வழிமுறை செம்ம ஈஸி.. இதோ..!
உங்கள் வாட்ஸ் அப் மெசேஜ்களைத் தவறுதலாக அழித்துவிட்டு, மெசேஜ்களை மீண்டும் பெற விரும்புபவரா நீங்கள்?
நமக்கு பிரியமானவர்களுடன் சாட் செய்யவும், படங்கள், வீடியோக்கள் முதலானவற்றைப் பகிரவும் நாம் பெரிதும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வருகிறோம். தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த்ம் போது, தவறுதலாக சில மெசேஜ்களை அழித்துவிட்டு, பின்னர் அதனைக் குறித்து வருந்தும் சூழல் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
நீங்களும் உங்கள் வாட்ஸ் அப் மெசேஜ்களைத் தவறுதலாக அழித்துவிட்டு, மெசேஜ்களை மீண்டும் பெற விரும்புபவரா நீங்கள்? கீழே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அழித்த வாட்ஸ் அப் மெசேஜ்களை மீண்டும் மீட்டுக் கொள்ளலாம்.
அழிக்கப்பட்ட வாட்ஸ் அப் சாட்களை மீட்பது எப்படி?
வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் போது அதில் உள்ள, `backup' ஆப்ஷனை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், அழிக்கப்பட்ட மெசேஜ்களை மீண்டும் மீட்பது மிகவும் எளிது. நீங்கள் பேக்கப் செய்து வைத்திருந்த வாட்ஸ் அப் டேட்டாவை மீண்டும் பதிவிறக்கி, அதனை வாட்ஸ் அப் செயலியுடன் இணைத்தால், உங்கள் மெசேஜ்கள் எளிதாக மீண்டும் கிடைத்து விடும்.
இது மட்டுமல்லாமல், உங்கள் கூகுள் ட்ரைவ் மூலமாகவும் வாட்ஸ் அப் மெசேஜ்களை மீட்கலாம். வாட்ஸ் அப் டேட்டா உள்பட பல்வேறு ஃபைல்களையும் எந்த டிவைஸிலும் பதிவிறக்கி பயன்படுத்த பாதுகாப்பான வழி இது. கூகுள் ட்ரைவ் மூலமாக வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் செய்வதற்கான வழிமுறைகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம்...
கூகுள் ட்ரைவ் மூலமாக வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் செய்வது எப்படி?
1. `வாட்ஸ் அப்’ செயலியைத் திறந்து, அதில் `More Options' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இப்போது `Settings' சென்று, அதில் `Chats' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் "Chat back up" என்பதைத் தேர்ந்தெடுத்து, அடுத்ததாக "Back up to Google Drive" என்ற ஆப்ஷனை அழுத்தவும்.
4. அடுத்ததாகக் காட்டப்படும் பக்கத்தில் எத்தனை கால இடைவெளிக்குள் உங்கள் ஃபோனை பேக்கப் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்.
5. கால இடைவெளியைத் தேர்வு செய்தவுடன், அதன் பிறகு, எந்த கூகுள் அக்கவுண்டில் உங்கள் சாட் ஹிஸ்டரியை பேக்கப் செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் கூகுள் அக்கவுண்ட் இல்லையென்றால், அதில் புதிதாக கூகுள் அக்கவுண்டை உருவாக்கிய பிறகு, லாக் இன் செய்யவும்.
6. இப்போது `Backup Over' என்று தேர்ந்தெடுத்து, அடுத்ததாக `Network' தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
7. இனி உங்கள் வாட்சாப் கூகுள் ட்ரைவிற்கு பேக்கப் செய்யப்படும்.
அழிக்கப்பட்ட மெசேஜ்களை கூகுள் ட்ரைவ் மூலமாக மீட்பது எப்படி?
1. உங்கள் வாட்ஸ் அப் மெசேஜ்கள் கூகுள் ட்ரைவிற்கு பேக்கப் செய்யப்பட்ட பிறகு, வாட்ஸ் அப் செயலியை அழித்துவிட்டு, உங்கள் ஃபோனில் மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.
2. தற்போது நீங்கள் பதிவு செய்த எண்ணைப் பயன்படுத்தி, வாட்ஸ் அப் செயலியின் லாகின் செய்யும் போது, கூகுள் ட்ரைவில் பேக்கப் செய்யப்பட்ட டேட்டாவைப் பயன்படுத்த வாட்ஸ் அப் உங்களிடம் கேட்கும் போது, அதனை ஏற்றுக் கொள்ளவும்.
3. `Yes' என்பதைத் தேர்ந்தெடுத்தவுடன், அழிக்கப்பட்ட மெசேஜ்கள் மீண்டும் மீட்கப்படும்.