AI Smart Glass: இனி மொபைல் போன் தேவையில்லை! வந்தாச்சு AI ஸ்மார்ட் கண்ணாடி! விலை எவ்வளவு தெரியுமா?
AI Smart Glass: மெட்டாவின் புதிய AI (Artificial Intelligence) ஸ்மார்ட் கண்ணாடிகளை மெட்ட நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று ( செப்டம்பர் 17) வெளியிட்டுள்ளார்.

AI Smart Glass: மெட்டாவின் புதிய AI (Artificial Intelligence) ஸ்மார்ட் கண்ணாடிகளை மெட்ட நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று ( செப்டம்பர் 17) வெளியிட்டுள்ளார்.
AI- ஸ்மார்ட் கண்ணாடிகள்:
நாம் வாழும் நவீன உலகில் நாளுக்கு நாள் டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முன்பை விட அறிவியல் மற்றும் தொழின் நுட்பத்தின் வளர்ச்சி தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் டெக்னாலஜியில் AI (Artificial Intelligence) வந்த உடன் இது இன்னும் வேகமாக அனைத்து வேலைகளையும் நமக்கு எளிமையாக செய்து கொடுத்து விடுகிறது. AI -யின் பயன்பாடும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இசுசூழலில் தான் இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கக் கூடிய ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
மொபைல் பயன்பாட்டை குறைக்கும்:
அதாவது Ray-Ban மற்றும் Oakley நிறுவனங்களுடன் இணைந்து ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த கண்ணாடிகள் மூலம் இனி மொபைல் பயன்பாடு வெகுமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. காரணம். இனி இந்த கண்ணாடிகல் மூலமே கேமரா, மேக், வாட்சம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும் அதற்கேற்றார் போல் தான் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டுள்ளாது.
விலை எவ்வளவு தெரியுமா?
இந்த ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி 70 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் இதன் விற்பனை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், “கண்ணாடிகள் தனிப்பட்ட சூப்பர் நுண்ணறிவுக்கு சிறந்த ஒரு முறையில் இருக்கும். இது உங்கள் நேரத்திற்கு ஏற்றார் போல் பயன்படுத்தும் படி இருக்கும்.
Meta Ray-Ban Display + Meta Neural Band = our most advanced pair of AI glasses. Ever. pic.twitter.com/PlrVcwbprN
— Meta (@Meta) September 18, 2025
அதே நேரத்தில் இந்த அனைத்து AI திறன்களையும் அணுகி உங்களை புத்திசாலியாக்க உதவுகின்றன. சிறப்பாக தொடர்பு கொள்ள உதவுகின்றன, உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துகின்றன, உங்கள் புலன்களை மேம்படுத்துகின்றன”என்று கூறியுள்ளார்.





















