ASUS LAPTOP: புதுப்புது அம்சங்கள்.. எக்கசக்க எதிர்பார்ப்புகள்.. இந்தியாவில் அறிமுகமான அசுஸ் எக்ஸ்பர்ட்புக் சீரிஸ் லேப்டாப்கள்!
அசுஸ் நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் கூடிய தனது புதிய லேப்டாப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் சாதனங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அசுஸ் நிறுவனம், ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் போன்ற பல சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதன் விளைவாகவே தற்போது, அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய லேப்டாப்கள் B1, B2, B3,B5, B7 மற்றும் மற்றும் 12th Gen B9 என அழைக்கப்படுகின்றன.
வடிவமைப்பு விவரங்கள்:
புதிய லேப்டாப் மாடல்களில் பில்ட்-இன் கைரேகை சென்சார், வெப்கேமரா, டேட்டா செக்யுரிட்டிக்காக டிரஸ்டட் பிளாட்ஃபார்ம் மாட்யுல் (TPM) 2.0 சிப் மற்றும் face recognition வசதிக்காக IR கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், ஹைப்ரிட் வொர்க் முறையை கருத்தில் கொண்டு வொர்க்ஸ்டேஷன் மற்றும் கன்வெர்டிபில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ASUS proudly presents the new range of ASUS ExpertBook Series!
— ASUS India (@ASUSIndia) December 1, 2022
Equipped with up to 12th Gen Processor, enterprise-grade security & long battery life, these are perfect business laptop for today’s & tomorrows business leaders.
B2 மாடல் விவரங்கள்:
எக்ஸ்பர்ட்புக் B2 மாடல் கிளாம்ஷெல் டிசைன் அல்லது ஃப்ளிப் வடிவில் வழங்கப்படுகிறது. 12th Gen இண்டெல் கோர் vப்ரோ பிராசஸர்கள் உடன், முறையே 15.6 இன்ச் அல்லது 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. அத்துடன் IR HD வெப்கேமரா, ஸ்மார்ட் கார்டு ரீடர், பேக்லிட் கீபோர்டு, ஹார்டுவேர் TMP 2.0 சிப் பொருத்தப்பட்டு உள்ளன.
B3 மாடல் விவரங்கள்:
எக்ஸ்பர்ட்புக் B3 ஃப்ளிப் 14 இன்ச் ஸ்கிரீன், TUV ரெயின்லாந்து சான்று, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், 360 டிகிரி டேப்லெட் மோட், ரி-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கீபோர்டு, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
B5 மாடல் விவரங்கள்:
எக்ஸ்பர்ட்புக் B5 சீரிஸ் மாடல்களில் இண்டெல் 12th Gen CoreTM i7-P சீரிஸ் 28W பிராசஸர், தண்டர்போல்ட் 4, ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 40 ஜிபி குயிக் DDR ரேம், வைபை 6 சப்போர்ட் உள்ளிட்டவை எக்ஸ்பர்ட் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
எக்ஸ்பர்ட்புக் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் 14 இன்ச் FHD+ ஸ்கரீன், ஆண்டி-கிலேர் கோட்டிங் உள்ளது. B5 ஃப்ளிப் மாடலில் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்டெப்லெஸ் கன்வெர்டிபில் ஹின்ஜ் உள்ளது.
B7 - B9 சிறப்பம்சங்கள்:
எக்ஸ்பர்ட்புக் B7 ஃப்ளிப் மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் i7 28-வாட் P சீரிஸ் பிராசஸர், வைபை 6, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 இன்ச் QHD+ 2560x1600 பிக்சல் ஆண்டி கிலேர் டச் ஸ்கிரீன், அசுஸ் பென், 360-டிகிரி ஹின்ஜ் உள்ளது. எக்ஸ்பர்ட்புக் B9 மாடலில் 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 5200 ரேம், அதிகபட்சம் ட்வின் 2TB எஸ்எஸ்டி, இண்டெல் வைபை 6 வழங்கப்பட்டுள்ளது.