(Source: ECI/ABP News/ABP Majha)
Jio vs Airtel vs Vi: 84 நாளுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்ஜெட் பேக்... ஜியோ, ஏர்டெல், விஐ-ல் என்ன ஸ்பெஷல்?
ஜியோ, விஐ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் சேவைகளில், இண்டர்நெட் வசதி, அழைப்பு சேவை, SMS சேவைகளைப் பெறலாம்.
மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருக்க கூடியவை ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ. கொரோனா பரவலால் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ சூழல் அதிகரித்திருப்பதாலும், இணைய சேவையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் மக்கள் மொபைல்போன்களை அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் 84 நாட்கள் வேலிடிட்டிக்கான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிய ஒரு சின்ன அலசல்.
ஜியோ, விஐ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் 84 நாட்களுக்கான ப்ரீபெய்ட் சேவைகளில், இண்டர்நெட் வசதி, அழைப்பு சேவை, SMS சேவைகளைப் பெறலாம்.
ஜியோ - 84 நாட்கள் - ரூ. 365
84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் சேவைகளில் இதுவே விலை குறைவான திட்டம். ஜியோவின் இந்த திட்டத்தில் மொத்தம் 6 ஜிபி இண்டர்நெட் சேவை கிடைக்கிறது. இண்டர்நெட் சேவையை பயன்படுத்த தினசரி டேட்டா வரம்பு கிடையாது. மேலும், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 1000 SMS அனுப்பி கொள்ளும் சேவை இதில் உள்ளது. கூடுதலாக JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் சேவையை பயன்பாட்டாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஏர்டெல் - 84 நாட்கள் - ரூ. 455
ஏர்டெல் வழங்கும் இத்திட்டத்தில், 84 நாட்களுக்கு மொத்தம் 6 ஜிபி இண்டர்நெட் டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 900 SMS சேவை வழங்கப்படுகிறது. இண்டர்நெட் சேவையை பயன்படுத்த தினசரி டேட்டா வரம்பு கிடையாது. கூடுதலாக, அமேசானின் ப்ரைம் வீடியோ மொபைல் சேவை, இலவச Hello Tunes, இலவச Wynk Music சேவை மற்றும் Apollo 24*7 Circle ஆகியவை முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
விஐ - 84 நாட்கள் - ரூ. 459
கிட்டத்தட்ட ஏர்டெல் வழங்கும் சேவையைப் போன்றுதான் இருக்கிறது விஐ-ன் சேவையும். விஐ ஆக மாறியிருக்கும் வோடபோன் ஐடியாவின் இத்திட்டத்தில் ரூ. 459க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.மொத்தம் 6 ஜிபி இண்டர்நெட் டேட்டாவுடன், அன்லிமிடெட் அழைப்புகள், 1000 SMS வழங்கப்படுகிறது. இண்டர்நெட் சேவையை பயன்படுத்த தினசரி டேட்டா வரம்பு கிடையாது இந்த திட்டத்தில், Vi Movies & TV Basic-ல் இலவச சந்தாதாரராக இணைந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்