மேலும் அறிய

Jeff Bezos : நியூ ஷெஃப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு பறக்கப்போகும் ஜெஃப் பெஸோஸ்

ஜெஃப் பெஸோஸ் அடுத்த மாதம் ஜூலை 20-ஆம் தேதி தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ், ப்ளூ ஆரிஜின் என்னும் ராக்கெட் நிறுவனத்தையும் வைத்துள்ளார், அந்த நிறுவனம் 'நியூ ஷெஃப்பர்ட்' என்னும் விண்கலத்தை தயாரித்துள்ளது. இந்த விண்கலத்தில் மனிதர்கள் அமர்ந்து விண்வெளியை சுற்றிப் பார்க்கும் முதல் பயணத்தை அடுத்த மாதம் ஜூலை 20-ஆம் தேதி மேற்கொள்ள ப்ளூ ஒரிஜின் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் விண்கலத்தின் முதல் பயணத்தில் தானும், தனது சகோதரர் மார்க்கும் பயணம் செய்ய இருப்பதாக ஜெஃப் பெஸோஸ் அறிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Jeff Bezos (@jeffbezos)

"எனக்கு ஐந்து வயதிலிருந்தே, விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்று கனவு உண்டு. ஜூலை 20-ஆம் தேதி, நான் எனது சகோதரருடன் அந்த பயணத்தை மேற்கொள்வேன்" என்று பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Jeff Bezos : நியூ ஷெஃப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு பறக்கப்போகும் ஜெஃப் பெஸோஸ்

இந்த விண்கல பயணம் மொத்தமாக 10 நிமிடங்கள் நீடிக்கும், இதில் நான்கு நிமிடங்கள் கார்மன் கோட்டிற்கு (karman line) மேல் விண்கலம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் உள்ள எல்லையைக் குறிக்கும், அந்த வகையில் பூமியின் வளிமண்டலத்திற்கு மேல் நியூ ஷெஃப்பர்ட் விண்கலம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeff Bezos : நியூ ஷெஃப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு பறக்கப்போகும் ஜெஃப் பெஸோஸ்ப்ளூ ஆரிஜின் தயாரித்துள்ள இந்த விண்கலம் தற்போது வரை 15 முறை பயணிகள் யாரும் உள்ளே இல்லாமல் சோதனை செய்யப்பட்டுள்ளது. நியூ ஷெஃபர்ட் விண்கலம் 6 பயணிகளுடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல்வரை பறக்க முடியும். பூமியின் வளிமண்டலத்தில் இருந்து மேலே சென்று விண்வெளியில் வளிமண்டலத்தில் பயணம் செய்யும்போது சில நிமிடங்கள் விண்வெளியில் மிதக்கும் அனுபவத்தை பயணிகள் பெற முடியும். மேலும் பூமியின் வட்ட வடிவை பூமிக்கு வெளியே இருந்து ரசிக்கும் வாய்ப்பும் பயணிகளுக்கு கிடைக்கும். அதன் பிறகு பாராசூட் மூலமாக பூமிக்கு மீண்டும் வந்து சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ட்ரிப் விண்வெளி சென்று வர 1.45 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
One Plus 16: 9000 mAh பேட்டரி, கேம் பிரியர்களுக்கு அசத்தலான ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget