மேலும் அறிய

Apple iPhone Launch Event | இப்போதான் IPHONE 13 ரிலீஸ் தேதி உறுதி.. அதுக்குள்ள இணையத்தில் கசிந்த IPHONE 14!

ஐபோன் 13 தேதி உறுதியானாலும் ஐபோன் 14 மாடலே இணைய டிரெண்டிங்கில் உள்ளது.

ஒரு பிராண்ட் சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப பிரியர்களுக்கு அது குறித்தான தேடலும் , ஆர்வமும் அதிகரித்துவிடும். அப்படி மொபைல் மார்கெட்டில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய பிராண்ட்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்13. எப்போதான்ய்யா ரிலீஸ் பண்ணுவீங்க என காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக , சத்தமே இல்லாமல் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் ஈவெண்ட் வருகிற வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி , அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் 13 வெளியாவது உறுதியாகியுள்ளது. முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி வாக்கில் ஐபோன் 13 வெளியிட படலாம் என இணையத்தில் தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஐபோன் 13 மாடல்களை பொருத்தவரை  Ming-Chi Kuo கணித்த மாதிரியே மூன்று விதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதாவது ஐபோன் 13, ஐபோன்13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி என நான்கு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஐபோன் என்றாலே விலை அதிகம்தான். குறிப்பாக இந்தியாவில்  ஆப்பிள் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லை என்பதால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. தற்போது வெளியாக உள்ள ஐபோன் 13 ஆனது விலையில் புதிய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது. 


Apple iPhone Launch Event | இப்போதான் IPHONE 13 ரிலீஸ் தேதி உறுதி.. அதுக்குள்ள இணையத்தில் கசிந்த IPHONE 14!

திரை :

அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள ஐபோன் 13 மினி மாடல் 5.4 இன்ச் ஸ்கிரீனுடனும், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் ஸ்கிரீனுடனும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீனுடனும் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


ஃபேஸ் டிடக்ஸனில் மாற்றம்:

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அவதியுற்று வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே முகத்தில் மாஸ்க் அணிந்த வண்ணம் ஐபோன்களை அன்லாக் செய்ய முடியாது. அதற்கு மாற்றாக , மாஸ்க் அணிந்திருந்தாலும் ஐபோனை அன்லாக் செய்யும்படியான புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.


IOS 15:

தற்போது வெளியாக உள்ள இந்த ஐபோன் 13 இல் IOS 15  இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மே மாதம் நிகழ்ந்த ஈவெண்ட் ஒன்றில் ஐ.ஓ.எஸ் 15 ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த இயங்குதளத்தின் சோதனை ஓட்டம் ஒரு சில பதிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபோன் 13 அறிமுக விழாவில் ஐ.ஓ.எஸ் 15 - இன் டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது.  IOS 15 இல் பல மாறுபட்ட புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அவையெல்லாம் ஓரளவுக்கு செப்டம்பர் 14 அன்று உறுதியாகிவிடும். குறிப்பாக ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் பயனாளர்களையும் கூட ஃபேஸ்டைமில் இணைக்கும் வசதிகளும் அறிமுகமாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் பயனாளர்களுக்கு இந்த இயங்குதள அப்டேட் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க , ஐபோன் 14 குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் இப்போதே கசிய தொடங்கிவிட்டன. குறிப்பாக ஐபோன் 14 புரோ மேக்ஸ் குறித்த புகைப்படங்கள் மற்றும் சில வசதிகள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி   6.7 இன்ச் திரையுடன் ,12 எம்.பி பிக்ஸலேட் வசதிகள் கொண்ட  48 எம்,பி முதன்மை கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8k வீடியோ எடுக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸைனை பொறுத்தவரை ஐபோன் 4 மாடல் போல காணப்படுகிறது. ஐபோன் 13 தேதி உறுதியானாலும் ஐபோன் 14 மாடலே இணைய டிரெண்டிங்கில் உள்ளது. ஐபோன் 14 அடுத்த வருடம் சந்தைப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Apple iPhone Launch Event | இப்போதான் IPHONE 13 ரிலீஸ் தேதி உறுதி.. அதுக்குள்ள இணையத்தில் கசிந்த IPHONE 14!

 

 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
விவோ, ஒப்போ, ஷாவ்மிக்கு புதிய சவால்! இந்திய மொபைல் சந்தையில் நடக்கும் மாற்றம்!
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ஏர்டெல் மாஸ் ஆஃபர்! இனி ரூ.200-ல் YouTube Premium & 30GB டேட்டா - பெறுவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?
41 கிராம் எடைதான்! 3K வீடியோ, Gemini AI… சாம்சங் ஸ்மார்ட் கண்ணாடியில் இத்தனை வசதிகளா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Actor Dhanush : ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..? அரசியலில் புதுத் திருப்பம்!
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா’ அண்ணாமலையுடன் இணையும் தனுஷ்..?
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Embed widget